• Login
Thursday, April 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

‘சின்ன தல’ சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் ஆகிறார்? | does suresh raina new batting coach for csk in next ipl season

GenevaTimes by GenevaTimes
May 26, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
‘சின்ன தல’ சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் ஆகிறார்? | does suresh raina new batting coach for csk in next ipl season
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிஎஸ்கே ரசிகர்களைப் பொறுத்தவரை தோனி ‘தல’ என்றால் சுரேஷ் ரெய்னா ‘சின்ன தல.’ அவர் சிஎஸ்கே-க்கு ஆடிய வரையில் மிடில் ஓவர், மிடில் ஆர்டர் பிரச்சினை சிஎஸ்கேவுக்கு எழுந்ததே இல்லை. அவர் போன்ற வீரர்கள் போன பிறகே சிஎஸ்கே அணி சரிவடையத் தொடங்கியது. இப்போது அப்படிப் போன வீரர்களை ஏதாவது ஒரு விதத்தில் அணிக்கு உதவியாகப் பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை.

அந்த விதத்தில் ‘சின்ன தல’ சுரேஷ் ரெய்னாவை ஐபிஎல் 2026 சீசனுக்காக சிஎஸ்கே அணி பேட்டிங் பயிற்சியாளராகக் கொண்டு வரலாம் என்ற முடிவெடுத்திருப்பதாக பிரபல ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

மைக்கேல் ஹஸ்ஸியின் கைவண்ணத்தில் சிஎஸ்கேவுக்கு பல பினிஷிங்குகளையும், மிடில் ஆர்டரில் ஸ்திரத்தையும் ஏற்படுத்தியவர் சுரேஷ் ரெய்னா. இந்நிலையில், இப்போதைய பேட்டிங் கோச் மைக்கேல் ஹஸ்ஸியின் இடத்திற்கு சுரேஷ் ரெய்னா வருவதுதானே பொருத்தம் என்று ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கின்றனர்.

நேற்று அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே ஆடிய ஆட்டத்தின் போது வர்ணனையில் இருந்த சுரேஷ் ரெய்னா, சிஎஸ்கேவின் பேட்டிங் பயிற்சியாளராக வரும் வாய்ப்பை லேசாகக் கோடிட்டு காட்டினார்.

இது குறித்து அசிஸ்டண்ட் பவுலிங் கோச் ஸ்ரீராமிடம் கேள்விகள் எழுப்பப்பட, அவர் பதில் கூறாமல் மவுனம் காத்தார். “எனக்குத் தெரியவில்லை. ரெய்னா அப்படி எதுவும் கூறினாரா என்பதை அவரிடம் நான் கேட்க வேண்டும்.” என்றார்.

முன்னதாக, சிஎஸ்கே – குஜராத் டைட்டன்ஸ் போட்டிக்கு முன்பாக ஸ்டூடியோவில் சிஎஸ்கேவின் 2025 சீசன் பற்றிய அலசலில் ஆகாஷ் சோப்ரா, சஞ்சய் பாங்கருடன் பேசிய சுரேஷ் ரெய்னா புதிய பேட்டிங் பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் பேச்சுக்களில் சிஎஸ்கே நிர்வாகம் இருப்பதாகத் தெரிவித்தார். அப்போது ஆகாஷ் சோப்ரா, அந்தப் புதிய பேட்டிங் கோச்சின் பெயர் ‘எஸ்’-இல் (ஆங்கில எழுத்து) ஆரம்பிக்குமா என்றும் அவர் அதிவேக அரைசதம் எடுத்தவரா என்றும் கேட்க ரெய்னா அதற்கு உடன்பாட்டு உடலசைவில் பதிலிறுத்தினார். உடனேயே ஆகாஷ் சோப்ரா, ‘இங்குதான் முதலில் கேட்கிறீர்கள்’ என்றும் முழங்கினார்.

சிஎஸ்கே அணிக்காக சுரேஷ் ரெய்னா, 200 போட்டிகளில் ஆடி, 5529 ரன்களை குவித்துள்ளார். 2014 ஐபிஎல் தொடரில் 16 பந்துகளில் அதிவேக அரைசதம் குவித்தார் ரெய்னா. இப்போது ரெய்னாவை பேட்டிங் கோச் ஆக நியமித்தால் நிச்சயம் சிஎஸ்கே ஓய்வறையில் புத்துணர்வும், உற்சாகமும் தோன்றும் என்பதில் வியப்பென்ன.



Read More

Previous Post

தென்மேற்கு பருவமழை தீவிரம்: கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், மும்பை, கர்நாடகாவிலும் கனமழை | Southwest monsoon begins Schools and colleges closed in Kerala Red alert for Karnataka floods in Mumbai

Next Post

71 மருத்துவமனை.. 5000 மெடிக்கல்.. 92 வயதிலும் அலுவலகம் செல்லும் இவர்!

Next Post
71 மருத்துவமனை.. 5000 மெடிக்கல்.. 92 வயதிலும் அலுவலகம் செல்லும் இவர்!

71 மருத்துவமனை.. 5000 மெடிக்கல்.. 92 வயதிலும் அலுவலகம் செல்லும் இவர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin