• Login
Sunday, September 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தென்கொரியா – அமெரிக்கா இராணுவப் பயிற்சிகளுக்கு மத்தியில் வடகொரியா ஏவுகணை சோதனை

GenevaTimes by GenevaTimes
September 20, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
தென்கொரியா – அமெரிக்கா இராணுவப் பயிற்சிகளுக்கு மத்தியில் வடகொரியா ஏவுகணை சோதனை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வடகொரியா ஞாயிற்றுக்கிழமை தனது கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியுள்ளதாக தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


சுமார் ஒரு வார காலத்திற்குள் வடகொரியா மேற்கொண்டுள்ள இரண்டாவது ஏவுகணைச் சோதனை இதுவாகும்.

அமெரிக்கா மற்றும் தென்கொரியா மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான இராணுவப் பயிற்சிகளே கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்து வருவதாக வடகொரியா குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், இந்த ஏவுகணைச் சோதனைகள் இடம்பெற்றுள்ளன.

பாலிஸ்டிக் ஏவுகணை என அடையாளம்


ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கிழக்குக் கடலை நோக்கி குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை வடகொரியா ஏவியதாக தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தென்கொரியா - அமெரிக்கா இராணுவப் பயிற்சிகளுக்கு மத்தியில் வடகொரியா ஏவுகணை சோதனை | Northkorea Missile Test Korea Us Military Exercise

அதனைத் தொடர்ந்து சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பின்னர் அதேபோன்ற மற்றொரு ஏவுகணையும் ஏவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



முதல் ஏவுகணை ஏவப்பட்டதை தென்கொரிய கூட்டு இராணுவத் தலைமைத்துவம், வொன்சான் பகுதியில் இருந்து பிற்பகல் சுமார் 3 மணியளவில் கண்டறிந்துள்ளது.

அந்த ஆயுதம் பாலிஸ்டிக் ஏவுகணை என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகமும் அந்த ஏவுகணை பாலிஸ்டிக் ஏவுகணையாக இருக்கலாம் என தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் தென்கொரியா

ஜப்பானின் பொது ஒலிபரப்பு நிறுவன தகவலின்படி, அந்த ஏவுகணை ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே கடலில் விழுந்துள்ளது.



450 கிலோமீற்றர் பயணம்
தென்கொரிய இராணுவத்தின் தகவலின்படி, முதல் ஏவுகணை சுமார் 450 கிலோமீற்றர் தூரம் பயணித்துள்ளது.

அது வடகொரியாவின் Hwasong-11 ஏவுகணைத் தொடரைச் சேர்ந்ததாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனைத் தொடர்ந்து, வொன்சான் பகுதியில் இருந்து மாலை சுமார் 5.50 மணியளவில் மற்றொரு குறுகிய தூர ஏவுகணை ஏவப்பட்டதாக தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.


இரண்டாவது ஏவுகணை 600 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இரண்டாவது ஏவுகணையும் பாலிஸ்டிக் ஏவுகணை என்பது உறுதிப்படுத்தப்பட்டால், சுமார் மூன்று மணி நேரத்திற்குள் வடகொரியா தொடர்ச்சியாக இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைச் சோதனைகளை நடத்தியதாக அது அமையும்.


அமெரிக்கா மற்றும் தென்கொரியா இடையிலான இராணுவ ஒத்துழைப்பு மற்றும் பயிற்சிகள் தொடர்பாக வடகொரியா தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், புதிய ஏவுகணைச் சோதனைகள் கொரிய தீபகற்பத்தின் பாதுகாப்பு நிலைமை தொடர்பான கவலையை மேலும் அதிகரித்துள்ளன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

8-வது ஊதியக் குழு: அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்! டபுளாகுமா அடிப்படைச் சம்பளம்? | 8th Pay Commission: What Could 2.75 and 3.5 Fitment Factors Mean for central government employees?

Next Post

பட்டு உற்பத்தியில் இந்தியாவை முதலிடத்திற்கு உயர்த்த அரசு உறுதி… மத்திய அமைச்சர் | India News (இந்தியா செய்திகள்)

Next Post
பட்டு உற்பத்தியில் இந்தியாவை முதலிடத்திற்கு உயர்த்த அரசு உறுதி… மத்திய அமைச்சர் | India News (இந்தியா செய்திகள்)

பட்டு உற்பத்தியில் இந்தியாவை முதலிடத்திற்கு உயர்த்த அரசு உறுதி... மத்திய அமைச்சர் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin