• Login
Saturday, September 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தமிழீழ விடுதலைப் புலிகளின் துல்லியமான எச்சரிக்கை! ஈஸ்டர் தாக்குதல் வாக்குமூலத்தில் அதிர்ச்சி

GenevaTimes by GenevaTimes
September 5, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
தமிழீழ விடுதலைப் புலிகளின் துல்லியமான எச்சரிக்கை! ஈஸ்டர் தாக்குதல் வாக்குமூலத்தில் அதிர்ச்சி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்த சதித்திட்டம் குறித்த வழக்கு விசாரணைகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நடைபெற்றும் வரும் நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் இரகசியத் தகவல்கள் வழங்கியதாக எங்கும் வெளிவராத மயிர்க் கூச்செறியும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவத் தொடர்பில் இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் வழங்கிய விசேட வாக்குமூலத்தில் இதுவரை கேட்டிராத புலனாய்வுத் தகவல் பரிமாற்றங்கள் குறித்த விபரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருவதால் அவர்களின் உண்மையான பெயர்களை வெளிப்படுத்தாமல் புனைப்பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு விசாரணையின்போது சாட்சிகளிடமிருந்து பெறப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் மட்டுமே.

சஹ்ரான் பற்றிய தகவல்

இராணுவ புலனாய்வுப் பிரிவின் 1வது படைப்பிரிவைச் சேர்ந்த கோப்ரல் தர அதிகாரி ஒருவர் இந்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் துல்லியமான எச்சரிக்கை! ஈஸ்டர் தாக்குதல் வாக்குமூலத்தில் அதிர்ச்சி | Easter Attack Ltt Sri Lanka Intelligence

இந்தியாவின் சிறப்புப் காவல்துறை  பிரிவு அதிகாரி ஒருவர், இராணுவத் தகவல் வழங்கி (informer) ஒருவர் ஊடாக, தாக்குதலுக்கு முன்னர் சஹ்ரான் பற்றிய தகவல்களை எவ்வாறு வழங்கினார் என்பது பற்றிய புதிய தகவல்கள் இதில் அடங்கியுள்ளன.

இந்தக் கோப்ரல் அதிகாரியை நாம் “பிரதீப்” எனக் குறிப்பிடுவோம். பிரதீப்பின் கடமை, தகவல் வழங்குபவர்களை இயக்கி புலனாய்வுத் தகவல்களைச் சேகரிப்பதாகும்.

இதற்காக அவர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தகவல் தொடர்பாளர்கள் அடங்கிய வலையமைப்பு ஒன்றை வைத்திருந்தார்.
2016 ஆம் ஆண்டு, இந்தியாவில் இருந்து இலங்கை வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் முன்னாள் போராளி ஒருவரை பிரதீப் சந்திக்கிறார்.

அவரை நாம் “சார்லஸ்” எனக் குறிப்பிடுவோம். சார்ல்ஸை பிரதீப் தனது தகவல் வழங்குபவராக மாற்றிக்கொண்டு, அவருக்கென தனி கோப்பு ஒன்றை பராமரிக்கத் தொடங்குகிறார்.

சார்ல்ஸுக்கு இந்தியாவில் விரிவான தகவல் வலையமைப்பு இருந்தது. தமிழக காவல்துறை சிறப்புப் பிரிவான ‘Q’ பிரிவின் பிரதானியான ஈஸ்வரமூர்த்தி என்பவருடன் சார்லஸுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது.


சார்ல்ஸ் மூலமாக, பிரதீப் இந்திய ‘Q’ பிரிவு பிரதானி ஈஸ்வரமூர்த்தியுடன் தொலைபேசியில் உரையாடும் வாய்ப்பைப் பெறுகிறார். இதன் மூலம் சட்டவிரோதமாக இந்தியாவிற்குத் தப்பிச் செல்லும் நபர்கள், முகாம்களில் உள்ள அகதிகள் மற்றும் இந்தியாவில் ஒளிந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பற்றிய தகவல்கள் பிரதீப்பிற்குப் கிடைக்கத் தொடங்குகின்றன.

ஒரு முக்கிய எச்சரிக்கை

2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், ‘Q’ பிரிவு பிரதானி ஈஸ்வரமூர்த்தி, சார்லஸ் ஊடாக ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுக்கிறார்:
மட்டக்களப்பில் சஹ்ரான் மௌலவி என்பவர் தீவிரவாதக் கருத்துக்களைப் பரப்பி வருவதாகவும், அவரது காணொளிகள் வலையொளி தளத்தில் (YouTube) உள்ளதாகவும் கூறி அதற்கான இணைப்பை (link) வழங்குகிறார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் துல்லியமான எச்சரிக்கை! ஈஸ்டர் தாக்குதல் வாக்குமூலத்தில் அதிர்ச்சி | Easter Attack Ltt Sri Lanka Intelligence

சஹ்ரான் மிகவும் ஆபத்தான தீவிரவாதி என்றும், எதிர்காலத்தில் அவராலும் அவரது குழுவினராலும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கிறார்.
ஐ.எஸ். (ISIS) அமைப்பின் பயிற்சி கையேடுகள்,

குண்டு தயாரிக்கும் முறைகள் மற்றும் தற்கொலைத் தாக்குதல் பற்றிய தகவல்கள் அடங்கிய அரபு மொழிப் புத்தகம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் பகிரப்பட்டு வருவதாகவும் தகவல் அளிக்கிறார்.

இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, பிரதீப் தனது கட்டளை அதிகாரிக்கு விபரங்களை தெரிவிக்கிறார். பின்னர், சார்லஸின் தொலைபேசி ஊடாக பிரதீப்பின் கட்டளை அதிகாரியும், இந்திய ‘Q’ பிரிவு அதிகாரி ஈஸ்வரமூர்த்தியும் ஆங்கிலத்தில் நேரடியாகப் பேசுகின்றனர்.

இதன் தீவிரத்தை உணர்ந்த கட்டளை அதிகாரி, சஹ்ரான் குறித்து உடனடியாக ஒரு முழுமையான அறிக்கையைத் தயாரித்து இராணுவ புலனாய்வு இயக்குனருக்கு (Director of Military Intelligence) அனுப்புமாறு பிரதீப்பிற்கு உத்தரவிடுகிறார்.

அதன்படி அறிக்கை தயாரிக்கப்பட்டு, அதிகாரியின் கையொப்பத்துடன் அனுப்பி வைக்கப்படுகிறது.
அதேவேளை, தனது ஏனைய தகவல் தொடர்பாளர்கள் ஊடாகவும் இந்தச் சஹ்ரான் என்ற தீவிரவாதி குறித்துத் தேடிப் பார்த்தபோது,

மன்னாரில் உள்ள தனது மற்றொரு தகவல் தொடர்பாளர் மூலம் பிரதீப்பிற்கு ஒரு புலனாய்வுத் தகவல் கிடைக்கிறது. சஹ்ரான் கடல் வழியே இந்தியாவிற்குத் தப்பிச் சென்று மீண்டும் இலங்கைக்கு வந்துள்ளதாகவும்,அவர் இலங்கையிலிருந்து தப்பிச் செல்ல முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் என்ற அரசியல்வாதியின் உதவி கிடைத்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது.

விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்

இது குறித்து இராணுவ புலனாய்வு பிரிவுக்கு (DMI) அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டபோது, ரிஷாத் பதியுதீனின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் “பலமிக்க அரசியல்வாதி ஒருவர்” என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. (இது நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் நடந்ததாகக் கருதப்படுகிறது).

[198CKN
]

2018 நவம்பர் 30ஆம் திகதி மட்டக்களப்பு வவுணதீவு காவல்துறை சோதனைச்சாவடியில் கடமையிலிருந்த இரண்டு காவல்துறையினர் படுகொலை செய்யப்பட்டு, அவர்களின் துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இச்சம்பவம் நடந்த அன்றைய தினம் காலையிலேயே, தகவல் தொடர்பாளரான சார்லஸ் இராணுவ புலனாய்வு அதிகாரி பிரதீப்பைத் தொடர்புகொள்கிறார்.

“நேற்று மட்டக்களப்பில் நடந்த சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டீர்களா?” என வினவுகிறார். அதற்கு, “தமிழக ‘Q’ பிரிவு பிரதானி ஈஸ்வரமூர்த்தி என்னிடம் இவ்வாறு கூறினார்;

இத்தாக்குதலை நாம் ஏற்கனவே பேசிவந்த சஹ்ரானின் குழுவினரே நடத்தியுள்ளனர்” எனச் சார்லஸ் தெரிவிக்கிறார்.
உடனடியாக, இராணுவ புலனாய்வு கோப்ரல் பிரதீப், சஹ்ரான் குறித்து ஏற்கனவே தயாரித்த அறிக்கையை எடுத்துக்கொண்டு முகாமின் சி.ஓ. (CO – Commanding Officer) இடம் சென்று காண்பிக்கிறார்.

அதற்கு சி.ஓ., “இது குறித்து மேலும் ஆராயுங்கள்” எனக் கூறிய போதிலும், மேலதிக விரிவான வழிகாட்டல்கள் எதையும் வழங்கவில்லை.

வெளிவந்துள்ள வாக்குமூலம்

இதனைத் தொடர்ந்து, இராணுவ புலனாய்வு பிரிவின் மாதாந்த மறுஆய்வுக் கூட்டத்தில்
வவுணதீவு சம்பவத்தை தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களே செய்திருப்பார்கள் என இராணுவ புலனாய்வு பிரிவு சந்தேகித்ததால், பிரதீப்பின் கட்டளை அதிகாரி,

“இச்சம்பவம் சஹ்ரான் தரப்பால் அல்ல, தமிழீழ விடுதலைப்புலிகள் தரப்பாலேயே செய்யப்பட்டது என சந்தேகிக்கப்படுகிறது.
இதை பிரதீப் தனது தகவல் வழங்கி சார்லஸிடம் கூறியபோது, சார்லஸ் அதனை மறுக்கிறார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் துல்லியமான எச்சரிக்கை! ஈஸ்டர் தாக்குதல் வாக்குமூலத்தில் அதிர்ச்சி | Easter Attack Ltt Sri Lanka Intelligence

கடற்புலிகளின் முன்னாள் உறுப்பினரான சார்லஸ், “இதில் தேடுவதற்கு எதுவுமில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருபோதும் காவல்துறையினரை இப்படிக் கொடூரமான முறையில் கொல்ல மாட்டார்கள்.

இவ்வாறான கொடூரமான படுகொலைகளை முஸ்லிம் தீவிரவாதிகளே செய்வார்கள்” எனத் தெரிவிக்கிறார். இந்தத் தகவலும் பிரதீப்பினால் தனது கட்டளை அதிகாரிக்குத் தெரிவிக்கப்பட்டது.

தற்போது வெளிவந்துள்ள இந்த வாக்குமூலத்தின் மூலம், சஹ்ரான் குழுவே இத்தாக்குதலை நடத்தியது என்ற தகவல் இராணுவ புலனாய்வுப் பிரிவிற்கு முன்கூட்டியே கிடைத்திருந்த போதிலும், இராணுவ புலனாய்வுப் பிரிவு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு மற்றொரு கோணத்தில் இங்கு உறுதிப்படுத்தப்படுகிறது.

குண்டு வெடித்த பின்னர் கோப்ரல் தனது முகாமில் உள்ள அதிகாரிகளுக்குத் தெரிவித்த கருத்து. அதாவது, சார்ல்ஸ் என்பவர் “உங்களுக்குத் தகவல் கூறியும் நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, இப்போது குண்டுகள் வெடித்துள்ளன, சஹ்ரான் ஷாங்க்ரி-லா ஹோட்டலில் இறந்துவிட்டான், மற்றவர்களும் இறந்துவிட்டார்கள்” எனக் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன் பிறகு,இந்த அணியைச் சேர்ந்த மேலும் 10 பேர் மட்டக்களப்பு, சாய்ந்தமருதுப் பகுதியில் இருக்கிறார்கள். அவர்கள் இந்தியாவுக்குத் தப்பிச் செல்லத் தயாராக இருக்கிறார்கள் இந்த அனைத்துத் தகவல்களும் இந்தியாவின் தமிழ்நாடு காவல்துறையின் ‘Q’ பிரிவின் பிரதானியான ஈஸ்வரமூர்த்தி என்பவரிடமிருந்தே வந்ததாகப் பதிவாகியுள்ளது.

ஈஸ்வரமூர்த்தி தனக்குக் கூறியதாகவே சார்லஸ் இந்தத் தகவல்களைத் தெரிவிக்கிறார்.
இவ்வாறு இந்தியாவிலிருந்து ஈஸ்வரமூர்த்தி என்ற அதிகாரி, தனது தகவல் வழங்குநரான சார்லஸ் மூலமாக வழங்கிய தகவல்கள் 100% சரியானது என்பதை இந்த இராணுவக் கோப்ரல் இப்போது உறுதிப்படுத்தியுள்ளார்.

“இவ்வளவு தகவல்கள் கிடைத்திருந்தும் அதைப் பயன்படுத்தத் தவறியதால் இந்தச் தொடர் சம்பவங்களைத் தடுத்துநிறுத்த முடியாமல் போனது குறித்து மிகுந்த வருத்தமடைகிறேன்” என்றும் அவர் கூறுகிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

கென்யாவில் இருந்து டாடா நிறுவனம் வெளியேற அந்நாட்டு அதிபர் உத்தரவு! | World News (உலக செய்திகள்)

Next Post

கேரளாவில் 8 தமிழக மாணவர்கள் உயிரிழப்பு காரணம் என்ன? – பெற்றோருக்கு நேர்ந்த கூடுதல் சோகம்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
கேரளாவில் 8 தமிழக மாணவர்கள் உயிரிழப்பு காரணம் என்ன? – பெற்றோருக்கு நேர்ந்த கூடுதல் சோகம்! | India News (இந்தியா செய்திகள்)

கேரளாவில் 8 தமிழக மாணவர்கள் உயிரிழப்பு காரணம் என்ன? - பெற்றோருக்கு நேர்ந்த கூடுதல் சோகம்! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin