• Login
Wednesday, October 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சொந்த வீடு வாங்க போறீங்களா.. இந்த தீபாவளி தான் சரியான நேரம்.. ஏன் தெரியுமா..? | Is This the Best Time to Buy Property? Why Unsold Inventory hits roof.. Unpacking Developer Discounts Amid Slumping Sales

GenevaTimes by GenevaTimes
October 14, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
சொந்த வீடு வாங்க போறீங்களா.. இந்த தீபாவளி தான் சரியான நேரம்.. ஏன் தெரியுமா..? | Is This the Best Time to Buy Property? Why Unsold Inventory hits roof.. Unpacking Developer Discounts Amid Slumping Sales
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சொந்த வீடு வாங்க போறீங்களா.. இந்த தீபாவளி தான் சரியான நேரம்.. ஏன் தெரியுமா..?

இந்தியாவில் பண்டிகை காலம் துவங்கவிட்டாலே கொண்டாட்டத்துடன், வர்த்தக துறையும் குதுகலமாகிவிடும். அந்த வகையில் இந்த ஆண்டு பண்டிகை காலம் என்பது ரியல் எஸ்டேட் துறைக்குப் பொற்காலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாகப் புதிதாக வீடு வாங்கத் திட்டமிடுவோருக்கு இந்த பண்டிகை காலத்தில் அதிகப்படியான தள்ளுபடியுடன் வீடு வாங்கும் சூழ்நிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சொந்த வீடு வாங்க போறீங்களா.. இந்த தீபாவளி தான் சரியான நேரம்.. ஏன் தெரியுமா..?

தற்போது ரியல் எஸ்டேட் சந்தையில் இருக்கும் முக்கியமான பிரச்சனை என்னவென்றால் சந்தையில் வீடுகள் விற்பனை செய்யப்படுவதை விடவும், சந்தையில் அறிமுகம் செய்யப்படும் புதிய வீடுகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால், விற்பனை ஆகாமல் பல லட்சம் வீடுகள் கிடப்பில் உள்ளது.

இதனால் புதிய திட்டங்களின் அறிமுகமும், கட்டுமானமும் தொய்வடைந்து வருகிறது. இதனால் ரியல் எஸ்டேட் நிறுவனங்களும், பில்டர்களும், விற்பனை ஆகாமல் தேங்கிக் கிடக்கும் வீடுகளை வேகமாக விற்பனை செய்ய இந்த பண்டிகை காலத்தை முக்கியமான இலக்காக வைத்துள்ளனர்.

இந்தியாவில் சென்னை, மும்பை, பெங்களூர், ஹைதராபாத் என முக்கிய மெட்ரோ நகரங்களில் விற்பனை செய்யப்படாமல் தேங்கி கிடக்கும் வீடுகளின் எண்ணிக்கை இந்த வருடச் செப்டம்பர் காலாண்டின் இறுதியில் 12 சதவீதம் அதிகரித்து 6.31 லட்சம் வீடுகளாக உள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 5.62 லட்சம் வீடுகளாக இருந்தது பெரிய அளவில் உயர்ந்துள்ளது.

ஆனால் செப்டம்பர் காலாண்டில் ஒரு முக்கியமான மாற்றம் நடந்துள்ளது, இக்காலாண்டில் புதிதாகக் கட்டப்பட்ட வீடுகளின் விற்பனையோ 3 சதவீதம் மட்டுமே உயர்ந்து 1,00,220 வீடுகள் மட்டுமே விற்கப்பட்ட நிலையில், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட வீடுகளின் அளவு 18 சதவீதம் அதிகரித்து 1.14 லட்சம் வீடுகள் சந்தைக்கு வந்துள்ளது. இதனால் தேக்கமடைந்த வீடுகளின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் புதிய வீடுகளின் விற்பனை தேக்கமடைய முக்கியமான காரணம், வீடுகளின் விலை தாறுமாறாக உயர்ந்திருப்பது தான். உதாரணமாகப் பெங்களூரில் 2 வருடங்களுக்கு முன்பு 2 bhk வீடுகள் 40-75 லட்சத்திற்கு விற்கப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது இதன் விலை 1 கோடிக்கும் அதிகமாகியுள்ளது. இதேபோல் சென்னை, மும்பை, ஹைதராபாத் என நாட்டின் அனைத்து நகரங்களிலும் இதே நிலை தான். இதனால் சொந்த வீடு வாங்கத் திட்டமிடும் சாமானிய மக்கள் தங்களுடைய முடிவைத் தள்ளிப்போட்டு உள்ளனர்.

இதேபோல் நாட்டின் 7 முக்கிய நகரங்களிலும் கடந்த 2-3 வருடங்களாக ப்ரீமியம் வீடுகள் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் மக்களால் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் சந்தை மாறியுள்ளது.

அடுத்தாக மெட்ரோ நகரங்களில் வீடு வாங்கும் முக்கியமான பிரிவினர் ஐடி மற்றும் டெக் துறை ஊழியர்கள் தான். இத்துறையில் அதிகரித்து வரும் பணிநீக்கம், நிரந்தரமற்ற வேலைவாய்ப்பு சூழ்நிலை ஆகியவை பெரியளவில் ரியல் எஸ்டேட் துறையை பதித்து வருகிறது.

இதனால் தேங்கி கிடக்கும் வீடுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ரியல் எஸ்டேட் துறையினர் இந்த பண்டிகை காலத்தில் அதிகளவில் தள்ளுபடிகளையும், ஆஃபர்களை கொடுத்து வீடுகளை விற்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.

எனவே சொந்த வீடு வாங்க நீங்கள் திட்டமிட்டால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். இதேபோல் ரெப்போ ரேட் உயர்வால் வங்கிகள் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த உள்ள வேளையில் இதையும், மனதில் வைத்திக்கொண்டு வீடுகளை வாங்கலாம்.

Share This Article

English summary

Is This the Best Time to Buy Property? Why Unsold Inventory hits roof.. Unpacking Developer Discounts Amid Slumping Sales

Is This the Best Time to Buy Property? Why Unsold Inventory hits roof.. Unpacking Developer Discounts Amid Slumping Sales — சொந்த வீடு வாங்க போறீங்களா.. இந்த தீபாவளி தான் சரியான நேரம்.. ஏன் தெரியுமா..?

Story first published: Wednesday, October 14, 2026, 19:27 [IST]

Other articles published on Oct 14, 2026

Read More

Previous Post

நாட்டையே உலுக்கிய Blue Drum வழக்கு! கணவனைக் கொன்ற மனைவிக்கும் ஆண் நண்பருக்கும் என்ன தண்டனை தெரியுமா? | Blue Drum case | India News (இந்தியா செய்திகள்)

Next Post

சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ரோபோ பறிமுதல்! இயந்திரங்கள் தவறு செய்தால் தண்டனை யாருக்கு? | World News (உலக செய்திகள்)

Next Post
சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ரோபோ பறிமுதல்! இயந்திரங்கள் தவறு செய்தால் தண்டனை யாருக்கு? | World News (உலக செய்திகள்)

சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ரோபோ பறிமுதல்! இயந்திரங்கள் தவறு செய்தால் தண்டனை யாருக்கு? | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin