• Login
Wednesday, October 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ரோபோ பறிமுதல்! இயந்திரங்கள் தவறு செய்தால் தண்டனை யாருக்கு? | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 14, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ரோபோ பறிமுதல்! இயந்திரங்கள் தவறு செய்தால் தண்டனை யாருக்கு? | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜெர்மனியின் கொலோன் (Cologne) நகரில் உள்ள ஒரு உணவகத்திற்கு வெளியே, கடந்த 11 ஆம் தேதி நள்ளிரவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சீன தயாரிப்பான ‘Unitree R1 Air’ என்ற 4 அடி உயரமுள்ள மனித உருவ ரோபோ (சுமார் ரூ.5.3 லட்சம் மதிப்புடையது), அயர்ன் மேன் உடை அணிவிக்கப்பட்டு, 16 வயது சிறுமியிடம் தகாது முறையிலான அசைவுகளையும் அத்துமீறலையும் செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தை அந்த ரோபோவின் 16 வயது உரிமையாளரும், அவரது 19 வயது நண்பரும் நேரலையாக (Live Stream) இணையத்தில் ஒளிபரப்பியுள்ளனர். அதன்பின்னர், ரோபோவை காரின் பின்புறத்தில் மறைத்து வைத்திருந்தபோது ஜெர்மன் காவல்துறை அதையும், இரண்டு செல்போன்களையும் பறிமுதல் செய்தது.

இந்தச் செயல் மனிதரால் இயக்கப்பட்டு திட்டமிட்டு செய்யப்பட்டதா, முன்கூட்டியே புரோகிராம் செய்யப்பட்டதா அல்லது தொழில்நுட்பக் கோளாறா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ரோபோக்கள் மனிதர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவது இது முதன்முறையல்ல. 2015 இல் ஸ்விட்சர்லாந்தில் ஒரு ரோபோ ‘டார்க் வெப்’ மூலம் ஹெராயின் மாத்திரைகளை வாங்கியதால் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது. 2016 இல் கலிபோர்னியாவில் ஒரு பாதுகாப்பு ரோபோ சிறுவனை அடையாளம் காணத் தவறித் தள்ளியது.

2024 இல் சவூதி அரேபியாவில் ஒரு ரோபோ நேரலை நிகழ்ச்சியில் பெண் செய்தியாளரிடம் தவறாக நடந்துகொண்டதாக சர்ச்சை எழுந்தது. 2025 இல் செஸ் விளையாடிய ரோபோ ஒன்று சிறுவனின் விரலை உடைத்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘யுரோபோல்’ (Europol) அறிக்கையின்படி, எதிர்காலத்தில் முதியோர் பராமரிப்பு ரோபோக்கள் ஹேக் செய்யப்பட்டு குற்றங்களுக்குப் பயன்படுத்தப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 2040-க்குள் மனிதர்களை விட ரோபோக்களே அதிக குற்றங்களைச் செய்யக்கூடும் என்றும் சில எதிர்கால ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.

சட்ட நிபுணர்களின் கூற்றுப்படி, ரோபோக்கள் தனிநபர் சட்ட அங்கீகாரம் (Legal Personhood) பெற்றவை அல்ல. குற்றவியல் சட்டத்தின்படி, ஒரு குற்றத்திற்குச் ‘செயல்’ (Act) மட்டுமின்றி, ‘குற்ற எண்ணம்’ மிக அவசியம். ரோபோக்களுக்குச் சொந்தமாக எண்ணங்களோ, உணர்வுகளோ இல்லாததால் அவற்றைச் சட்டப்படி தண்டிக்க முடியாது.

எனவே, குற்றத்தின் பின்னணியில் உள்ள மனித இயக்கமே முக்கியப் காரணியாகிறது. ஒரு மனிதன் ரோபோவை இயக்கி குற்றத்தைச் செய்திருந்தால், அந்த மனிதர் மீது குற்றவியல் நடவடிக்கை பாயும்.

மாறாக, அது தொழில்நுட்பக் கோளாறாக இருந்தால் தயாரிப்பு நிறுவனம் அல்லது உரிமையாளரின் அலட்சியமே பொறுப்பாக்கப்படும். இந்தச் சம்பவம் ரோபோக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டப்பூர்வக் கட்டுப்பாடுகளின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

Read More

Previous Post

சொந்த வீடு வாங்க போறீங்களா.. இந்த தீபாவளி தான் சரியான நேரம்.. ஏன் தெரியுமா..? | Is This the Best Time to Buy Property? Why Unsold Inventory hits roof.. Unpacking Developer Discounts Amid Slumping Sales

Next Post

தவாவ் விமான நிலைய அலுவலகத்தில் அவசரகாலப் பயிற்சியின் போது விஷம் உமிழும் நாகம் | Makkal Osai

Next Post
தவாவ் விமான நிலைய அலுவலகத்தில் அவசரகாலப் பயிற்சியின் போது விஷம் உமிழும் நாகம் | Makkal Osai

தவாவ் விமான நிலைய அலுவலகத்தில் அவசரகாலப் பயிற்சியின் போது விஷம் உமிழும் நாகம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin