Last Updated:
பயங்கர நிலச்சரிவால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு குடிநீர், மின்சாரம் மற்றும் எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ளது.
சீனாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
சோங்கிங் மாகாணத்தின் பெங்ஷி நகரில் உள்ள மலைப்பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் இருந்த 10-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மண்ணில் புதைந்த நிலையில், மக்களும் மண்ணுக்குள் சிக்கினர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, ஆயிரத்து நூறு பேரை பாதுகாப்பாக அப்புறப்படுத்தியதாகக் கூறியுள்ள சீன அரசு, எட்டு உடல்களை மீட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும், மாயமான 34 பேரை தேடும் பணிகள் தொடர்வதாகக் குறிப்பிட்டுள்ளது.
பயங்கர நிலச்சரிவால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு குடிநீர், மின்சாரம் மற்றும் எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ளது.


