• Login
Thursday, September 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சர்க்கரை தொடர்ந்து அரிசி விலை தாறுமாறாக உயரப்போகிறதா..? 20 வருடத்தில் குறைவான உற்பத்தி.. மக்களே உஷார்..! | India Rice Crisis: Production Projected for Biggest Drop in 20 Years Amid El Nino Drought

GenevaTimes by GenevaTimes
September 17, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
சர்க்கரை தொடர்ந்து அரிசி விலை தாறுமாறாக உயரப்போகிறதா..? 20 வருடத்தில் குறைவான உற்பத்தி.. மக்களே உஷார்..! | India Rice Crisis: Production Projected for Biggest Drop in 20 Years Amid El Nino Drought
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சர்க்கரை தொடர்ந்து அரிசி விலை தாறுமாறாக உயரப்போகிறதா..? 20 வருடத்தில் குறைவான உற்பத்தி.. மக்களே உஷார்..!

இந்திய மக்களின் அடிப்படை உணவாக இருக்கும் அரிசியின் உற்பத்தி யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 20 வருட சரிவைப் பதிவு செய்யும் என இத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் அரிசி உற்பத்தி தொடர்ந்து 10 வருடமாக அதிகரித்து வரும் வேளையில், 10 வருடத்தில் முதல் முறையாகச் சரிய உள்ளது.

கடைசியாக எல் நினோ தாக்கம் 2009-10 காலகட்டத்தில் அரசி உற்பத்தி பெரிய அளவில் குறைந்த நிலையில், மீண்டும் இதேபோன்ற சம்பவம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் அரிசியும் சரி, ரீடைல் சந்தையில் விற்கப்படும் அரிசியும் சரி விலை பெரிய அளவில் உயரும் அபாயம் உருவாகியுள்ளது.

 சர்க்கரை தொடர்ந்து அரிசி விலை தாறுமாறாக உயரப்போகிறதா..? 20 வருடத்தில் குறைவான உற்பத்தி.. மக்களே உஷார்..!

ஏற்கனவே தாய்லாந்து மற்றும் வியட்நாம் நாட்டில் அரிசி விலை உச்சத்தை தொட்டு இருக்கும் நிலையில் இந்திய அரசியும் விலை உயரும் காரணத்தால் ஆசியச் சந்தையில் மொத்தமாக உணவு பணவீக்கம் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதேவேளையில் மற்றொரு முக்கியமான தகவலும் வெளியாகியுள்ளது, அதாவது கடந்த சில வருடங்களாக இந்தியாவில் பதிவான அதிகப்படியான அரசி உற்பத்தி மூலம் மத்திய அரசு தனது இருப்பை அதிகரித்துள்ளது. இந்த இருப்பை வைத்து உள்நாட்டுத் தேவையும், ஏற்றுமதி சந்தை வர்த்தகத்தைச் சரிவில் இருந்து காப்பாற்ற முடியும் எனக் கூறப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக இந்திய மக்களை சர்க்கரை விலை பாடாய் படுத்தி வந்த வேளையில் தற்போது அரிசி விலையும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதுக்குறித்தி அரசி ஏற்றுமதி அமைப்பின் தலைவர் பிவி கிருஷ்ண ராவ் கூறுகையில் இந்த வருடம் மழை பொழிவு குறைவாக இருக்கும் காரணத்தால், அரிசி உற்பத்தியில் சுமார் 10 மில்லியன் டன் குறையும் என கணிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த 10 மில்லியன் டன் அரிசி என்பது கடந்த ஆண்டின் 154 டன் அரிசி உற்பத்தியை ஒப்பிடுகையில் 6.5 சதவீதம் சரிவாகும். இது 2009-10 எல் நினோ காலக்கட்டத்திற்கு பின்பு பதிவாகும் குறைவான அரிசி உற்பத்தி அளவாகும். கடந்த சில வாரங்களாக நிலவும் வறண்ட வானிலை தெற்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் உற்பத்தி குறையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் போதுமான அரிசி இருப்பு இருக்கும் காரணத்தால் ஏற்றுமதி வர்த்தகம் எவ்விதமான மத்திய அரசின் தலையீடு இல்லாமல் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 1ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவில் சுமார் 59.6 மில்லியன் டன் அளவிலான நெல் இருப்பு உள்ளது.

இது அரசின் இலக்கான 10.3 மில்லியன் டன் இருப்புடன் கிட்டத்தட்ட 5 மடங்கு அதிகம் என்பதால் உற்பத்தி குறையும் நேரத்தில் கட்டாயம் உபரி இருப்பு போதுமானதாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. மத்திய அரசு சர்க்கரை உற்பத்தி குறைந்த போது எத்தனால் உற்பத்தியில் இருந்து சர்க்கரை உற்பத்திக்கு திருப்பி விட்டது மூலம் உற்பத்தியை பெருக்கி விலை குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share This Article

English summary

India Rice Crisis: Production Projected for Biggest Drop in 20 Years Amid El Nino Drought

India Rice Crisis: Production Projected for Biggest Drop in 20 Years Amid El Niño Drought — சர்க்கரை தொடர்ந்து அரிசி விலை தாறுமாறாக உயரப்போகிறதா..? 20 வருடத்தில் குறைவான உற்பத்தி.. மக்களே உஷார்..!

Story first published: Thursday, September 17, 2026, 17:58 [IST]

Other articles published on Sep 17, 2026

Read More

Previous Post

அமெரிக்காவின் 100% வரி: டிரம்பிற்கு அதிகாரம் அளிக்கும் மசோதா.. இந்தியா எதிர்வினை! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

’’விஜய் சேதுபதி திமுகவை சேர்ந்தவர்’’ | Tamilmirror Online

Next Post
’’விஜய் சேதுபதி திமுகவை சேர்ந்தவர்’’ | Tamilmirror Online

’’விஜய் சேதுபதி திமுகவை சேர்ந்தவர்’’ | Tamilmirror Online

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin