• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சதுரங்கத்தில் புதிய சகாப்தம்: உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு ரூ.5 கோடி ரொக்க பரிசு அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின் | cm stalin announces 5 crores for Gukesh

GenevaTimes by GenevaTimes
December 13, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
சதுரங்கத்தில் புதிய சகாப்தம்: உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு ரூ.5 கோடி ரொக்க பரிசு அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின் | cm stalin announces 5 crores for Gukesh
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிங்கப்பூர்/ சென்னை: சிங்​கப்​பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்​பியன்​ஷிப் போட்​டி​யின் நிறைவு விழா​வில், உலக சாம்​பியன் பட்டம் வென்ற தமிழக இளம் வீரர் குகேஷுக்கு தங்கப் பதக்​கம், டிராபி​யுடன் ரூ.11 கோடி பரிசுத் தொகை​யும் வழங்​கப்​பட்​டது. அவரை ஊக்கப்​படுத்​தும் வகையில் தமிழக அரசு சார்​பில் ரூ.5 கோடி ரொக்கப் பரிசு வழங்​கப்​படும் என்று முதல்வர் ஸ்டா​லின் அறிவித்​துள்ளார்.

சிங்​கப்​பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்​பியன்​ஷிப் போட்​டி​யில் சீனா​வின் லிங் லிரெனை வீழ்த்தி சாம்​பியன் பட்டம் வென்​றுள்​ளார் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்​டரான 18 வயது குகேஷ். இதன்​மூலம் இளம் வயதில் உலக சாம்​பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை​யும் படைத்​தார்.

விஸ்​வநாதன் ஆனந்​துக்கு பிறகு உலக சாம்​பியன் பட்டத்தை வென்ற இந்திய வீரர் என்ற பெரு​மை​யை​யும் பெற்றுள்​ளார். உலக செஸ் சாம்​பியன்​ஷிப் போட்​டி நிறைவு விழா சிங்​கப்​பூரில் நேற்று மாலை நடந்தது. இதில், இளம் உலக சாம்​பியனான குகேஷுக்கு, தங்கப் பதக்​கத்​தை​யும், டிராபியை​யும் சர்வதேச செஸ் சங்கத்​தின் (ஃபிடே) தலைவர் ஆர்கடி டிவோர்​கோ​விச் வழங்​கினார். ரூ.11 கோடி பரிசுத் தொகைக்கான காசோலை​யும் அவருக்கு வழங்​கப்​பட்​டது.

‘கடவுள் வழிகாட்டினார்’ – விழா​வில் குகேஷ் பேசும்​போது, “நான் ஒரு மில்​லியன் முறை வாழ்ந்​ததுபோல இத்தருணத்தை உணர்​கிறேன். இந்த கோப்​பையை ஏந்தி​யிருப்​பதை, என் வாழ்க்கை​யில் மற்ற எல்லா​வற்​றை​யும்விட முக்​கிய​மானதாக கருதுகிறேன். பல கனவு​களோடு, பல சவால்​களும் இந்த பயணத்​தில் இருந்தன. என்னுடன் இருந்​தவர்​களால் அது அழகாகவே அமைந்​தது. நான் தீர்வுகாண முடி​யாமல் தவித்து நின்ற நேரத்​தில், கடவுள்​தான் என்னை அழைத்துச் சென்று வழிகாட்​டி​யுள்​ளார்” என்று தெரிவித்தார்.

சாம்​பியன் டிராபியை பெற்ற பிறகு, மேடை​யில் இருந்து இறங்கி வந்த குகேஷ், அதை தனது தந்தை ரஜினி​காந்​திடம் வழங்​கினார். அவர், அதை குகேஷின் அம்மா பத்மகு​மாரி​யிடம் கொடுத்​தார். அதை கைகளில் வாங்கிய அவர், நெகிழ்ச்​சி​யுடன் முத்​தமிட்​டார். விழா​வில் நூற்றுக்​கணக்கான ரசிகர்கள் குகேஷை சூழ்ந்​தனர். மகிழ்ச்​சி​யுடன் அவர்கள் அனைவருக்​கும் ஆட்டோகிராப் போட்டுத் தந்தார்.

முன்னதாக ஃபிடே சார்​பில் காலையில் நடத்​தப்​பட்ட போட்​டோ ஷூட்​டின்​போது, டிராபியை வியந்து பார்த்த குகேஷ், “நிறைவு விழா​விலேயே டிராபியை பெற்றுக் கொள்​கிறேன். இப்போது தொட்டுப் பார்க்க விரும்ப​வில்லை” என்று கூறி​விட்​டார்.

தமிழக அரசு அறிவிப்பு: மிக இளம் வயதிலேயே உலக செஸ் சாம்​பியன்​ஷிப் போட்​டி​யில் வென்று உலக செஸ் சாம்​பியனாக வாகைசூடி சாதனை படைத்து, இந்தியா​வுக்​கும் தமிழகத்​துக்​கும் பெருமை சேர்த்த குகேஷை, முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்​தில் பாராட்டி வாழ்த்தி பதிவிட்​டிருந்​தார். அத்துடன் தொலைபேசி வாயி​லாக​வும் அவரை தொடர்​பு​கொண்டு வாழ்த்து தெரி​வித்​தார்.

தமிழகத்​துக்கு பெருமை சேர்த்​துள்ள குகேஷுக்கு ரூ.5 கோடி ரொக்​கப்​ பரிசு வழங்குமாறு முதல்​வருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டா​லின் கோரிக்கை விடுத்​தார். அதையேற்று, கு​கேஷை மேலும் ஊக்கு​விக்​கும் வகையில், ரூ.5 கோடி ரொக்கப் பரிசு வழங்​கப்​படும் என்று முதல்வர் ஸ்டா​லின் அறிவித்​துள்ளார் என தமிழக அரசு வெளி​யிட்ட அறிவிப்​பில் கூறப்​பட்​டுள்ளது.

‘சதுரங்கத்தில் புதிய சகாப்தம்’ – உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ள குகேஷ், சென்னை அடுத்த மேல் அயனம்​பாக்​கத்​தில் உள்ள வேலம்​மாள் வித்​யாலயா பள்ளி மாணவர் ஆவார். அவரது வெற்றி குறித்து பள்ளி நிர்​வாகம் வெளி​யிட்​டுள்ள செய்தி​யில், ‘தனது செஸ் பயணத்தை சிறு​வய​திலேயே தொடங்​கியவர் குகேஷ். அவரது திறமையை ஆரம்​பத்​திலேயே அடையாளம் கண்ட பள்ளி, அவரது திறமைகளை வளர்த்​துக் கொள்ள முழு ஆதரவு வழங்​கியது. கடும் பயிற்சி மற்றும் விளை​யாட்​டின் மீதான ஆர்வத்​தால் 12 வயதிலேயே கிராண்ட்​மாஸ்டர் பட்டம் பெற்​றார், தற்போது இந்​திய சதுரங்​கத்​தில் ஒரு பு​திய சகாப்​தம் படைத்துள்ளார். இளம் ​திறமை​யாளர்களை வளர்க்​கும் வேலம்​மாள் போன்ற நிறு​வனங்​களின் அர்ப்​பணிப்பு, ஆதர​வுக்கு இது ஒரு சான்​று’ என்​று கூறப்​பட்​டுள்​ளது.



Read More

Previous Post

ஜீவனாம்சத்தை தீர்மானிக்க இவையெல்லாம் அவசியம்.. 8 வழிகாட்டுதல்களை வெளியிட்ட உச்ச நீதிமன்றம்!

Next Post

இளையராஜாவின் சிம்பொனி நேரடி நிகழ்ச்சி அப்டேட் | Makkal Osai

Next Post
இளையராஜாவின் சிம்பொனி நேரடி நிகழ்ச்சி அப்டேட் | Makkal Osai

இளையராஜாவின் சிம்பொனி நேரடி நிகழ்ச்சி அப்டேட் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin