சமீபத்தில் இவரது இசையில் வெளியான ‘ஜமா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சமீப காலமாக வெளியான பல படங்களில் இவரது பழைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.சிம்பொனியை 35 நாட்களில் முழுவதுமாக எழுதி முடித்துவிட்டதாக கடந்த மே மாதம் இளையராஜா வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் அவரது முதல் சிம்பொனி நேரடி நிகழ்ச்சி குறித்து அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “2025 மார்ச் 8ம் தேதி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் என்னுடைய முதல் சிம்பொனி நேரலை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் டிக்கெட் விற்பனை குறித்த தகவலையும் பகிர்ந்துள்ளார்.


