• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஜீவனாம்சத்தை தீர்மானிக்க இவையெல்லாம் அவசியம்.. 8 வழிகாட்டுதல்களை வெளியிட்ட உச்ச நீதிமன்றம்!

GenevaTimes by GenevaTimes
December 13, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஜீவனாம்சத்தை தீர்மானிக்க இவையெல்லாம் அவசியம்.. 8 வழிகாட்டுதல்களை வெளியிட்ட உச்ச நீதிமன்றம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



ஜீவனாம்சம் தொடர்பாக மனைவி மற்றும் மாமியார் கொடுத்த தொல்லையால் பெங்களூரைச் சேர்ந்த ஐடி ஊழியர் சுபாஷ் அதுல் தற்கொலை செய்துகொண்டது விவகாரம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜீவனாம்ச தொகையை நிர்ணயிக்க உச்ச நீதிமன்றம் 8 வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த ஐடி ஊழியர் சுபாஷ் அதுல் தனது உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முன், பிரிந்து சென்ற தனது மனைவியும் அவரது குடும்பத்தினரும் பணம் கேட்டு மிரட்டி துன்புறுத்துவதாக தெரிவித்திருந்தார். மேலும், விவாகரத்து வழக்கில் நீதித்துறை மனைவிக்கு சாதகமாக செயல்படுவதாகவும் தனது 24 பக்க தற்கொலைக் கடிதத்தில் குற்றம் சாட்டியிருந்தார். இது விவாதமாக மாற, வலைதளங்களில் #Mentoo பிரச்சாரம் வலுவடைந்தது வருகிறது. இதற்கு மத்தியில் தான் விவாகரத்து வழக்குகளில் ஜீவனாம்ச தொகையை நிர்ணயிக்க உச்ச நீதிமன்றம் 8 வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது.

விளம்பரம்

நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் பிரசன்னா பி வரலே அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, இந்து தம்பதிகள் சம்பந்தப்பட்ட விவாகரத்து வழக்கில் இறுதி ஜீவனாம்சத் தொகையை தீர்மானிப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்…

1. கணவன் மற்றும் மனைவியின் சமூக மற்றும் பொருளாதார நிலை

2. மனைவி மற்றும் குழந்தைகளின் நியாயமான எதிர்கால தேவைகள்.

3. கணவன், மனைவியின் தனிப்பட்ட தகுதிகள் மற்றும் அவர்கள் பார்க்கும் வேலை.

4. கணவரின் வருமானம் மற்றும் அவருக்கு உள்ள சொத்துக்கள்

விளம்பரம்

5. கணவன் வீட்டில் மனைவி அனுபவிக்கும் வாழ்க்கைத் தரம்.

6. குடும்பப் பொறுப்புகளை கவனிப்பதற்காக மனைவியை வேலையை விட்டுவிட்டாரா என்பது.

7. அப்படி வேலைக்கு போகாத மனைவிக்கு சட்டப் போராட்டத்திற்கு தேவையான செலவு.

8. கணவரின் நிதி நிலை, அவரது வருமானம், பராமரிப்புக் கடமைகள் மற்றும் பொறுப்புகள்.

Also Read | பிரபல நடிகரை கடத்தி 12 மணி நேரம் துன்புறுத்திய கும்பல்… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

இந்த எட்டு வழிகாட்டுதல்களை அளவுகோல்களாக கொண்டு ஜீவனாம்சத் தொகையை நிர்ணயிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. பிரவீன் குமார் ஜெயின் மற்றும் அஞ்சு ஜெயின் என்ற தம்பதியினரின் விவாகரத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜீவனாம்சத்திற்கான இந்த வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அனைத்து நீதிமன்றங்களும் நிரந்தர ஜீவனாம்சத் தொகையை முடிவு செய்வதற்கான வழிகாட்டுதல்களாக இதனைப் பின்பற்ற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

விளம்பரம்

.

Read More

Previous Post

அநுர கட்சி எம்.பிக்களின் கல்வித்தகமை: ஜீவன் சமர்பிக்கவுள்ள முன்மொழிவு

Next Post

சதுரங்கத்தில் புதிய சகாப்தம்: உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு ரூ.5 கோடி ரொக்க பரிசு அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின் | cm stalin announces 5 crores for Gukesh

Next Post
சதுரங்கத்தில் புதிய சகாப்தம்: உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு ரூ.5 கோடி ரொக்க பரிசு அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின் | cm stalin announces 5 crores for Gukesh

சதுரங்கத்தில் புதிய சகாப்தம்: உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு ரூ.5 கோடி ரொக்க பரிசு அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின் | cm stalin announces 5 crores for Gukesh

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin