சுமனசிறி குணதிலக
பிபிலை, மேதகம, கரமட்டிய கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது நிலத்திற்கு அருகில் இருந்த பழைய விவசாயக் கிணறு ஒன்றை ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியுடன் புதிய சிலிண்டர்களைப் பொருத்திச் செப்பனிட்டுக் கொண்டிருந்த போது, மண்மேடு ஒன்று சரிந்து அதன் கீழ் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் டி.எம். குணரத்ன (60) என்பவராவார்.
கிராமத்திற்குத் தேவையான நீரைப் பெற்றுக் கொள்வதற்காகவே குறித்த விவசாயக் கிணறு மீண்டும் செப்பனிடப்பட்டு வந்த நிலையில், அவர் எதிர்பாராதவிதமாக இத்துயரச் சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.
அவரது மரணம் தொடர்பான திடீர் மரண விசாரணை, பிபிலை மூலிகைப் மருத்துவமனையில் நடைபெறவுள்ளது. பிபிலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுரவீர ஜெயலத் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.


