• Login
Tuesday, July 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஒன்று 5ஆக மாறும் மேஜிக்.. ஏர்டெல், ஹீரோ அள்ளி தரும் டிவிடெண்ட்! இந்த வாரம் விட்டால் எல்லாம் போச்சு | Dividend Alert: 88 Stocks Including Airtel, Hero MotoCorp, Abbott India Have Record Dates This Week

GenevaTimes by GenevaTimes
July 21, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ஒன்று 5ஆக மாறும் மேஜிக்.. ஏர்டெல், ஹீரோ அள்ளி தரும் டிவிடெண்ட்! இந்த வாரம் விட்டால் எல்லாம் போச்சு | Dividend Alert: 88 Stocks Including Airtel, Hero MotoCorp, Abbott India Have Record Dates This Week
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Business

oi-Vigneshkumar

Time
Published: Tuesday, July 21, 2026, 12:35 [IST]

மும்பை: பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இந்த வாரம், அதாவது ஜூலை 24 வரையிலான நாட்கள் மிகவும் முக்கியமானதாக உள்ளது. ஏனென்றால் மொத்தம் 88 நிறுவனங்களின் டிவிடெண்ட், போனஸ் பங்குகள், ஸ்பிலிட், டீமெர்ஜர் ஆகியவற்றுக்கான ரெக்கார்டு தேதி இந்த வாரம் வருகிறது. இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் இப்போது பலரும் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்ய ஆரம்பித்துவிட்டனர். அதிலும் குறிப்பாக பலரும் டிவிடெண்ட் வழங்கும் பங்குகளிலேயே ஆர்வம் காட்டு வருகிறார்கள். அதன்படி பார்த்தால் இந்த வாரம் ரொம்பவே முக்கியமான வாரமாக இருக்கிறது. மொத்தம் 88 நிறுவனங்களின் டிவிடெண்ட், போனஸ் பங்குகள், ஸ்பிலிட், டீமெர்ஜர் ஆகியவற்றுக்கான ரெக்கார்டு தேதி இந்த வாரம் வருகிறது.

Dividend india stocks personal finance

பங்குகள்

அதில் ஏர்டெல், ஹீரோ மோட்டோகார்ப், அபோட் இந்தியா, இன்போ எட்ஜ் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. ரெக்கார்டு தேதி தெரிந்து அந்த நிறுவனங்களை முன்கூட்டியே வாங்கினால் மட்டுமே இந்த பலன்கள் நமக்கு கிடைக்கும்.

50% தான் மாத சம்பளமா கைக்கு வரும்.. ஊதிய உயர்வு முறையை மாற்றிய அசெஞ்சர்! குழப்பத்தில் ஊழியர்கள்

50% தான் மாத சம்பளமா கைக்கு வரும்.. ஊதிய உயர்வு முறையை மாற்றிய அசெஞ்சர்! குழப்பத்தில் ஊழியர்கள்

டிவிடெண்ட்

இன்றைய தினம் ஏஞ்சல் ஒன், சோழமண்டலம் முதலீடு, பஞ்சாப் வங்கி, ரைன்போ மருத்துவமனை உட்பட 8 நிறுவனங்களின் ரெக்கார்டு தேதியாகும். இந்த பங்குகள் இன்று உங்கள் கணக்கில் இருந்தால் மட்டுமே இதற்கான டிரிடெண்ட் உங்களுக்கு கிடைக்கும். இது தவிர பாண்டி ஆக்சைட் & கெமிக்கல் நிறுவனம் 2:5 ஸ்டாக் ஸ்பிலிட்டையும் அறிவித்துள்ளது. பிரிப்பை மேற்கொள்கிறது. நாளைய தினம் மொத்தம் 11 நிறுவனங்கள் 11 நிறுவனங்கள் டிவிடெண்ட் வழங்க உள்ளன. அதில் குறிப்பாக ஹாக்கின்ஸ் குக்கர்ஸ் நிறுவனம் ரூ.140 டிவிடெண்ட் வழங்குகிறது. ஆதித்யா பிர்லா சன் லைஃப் ரூ.25.50 தருகிறது.

ஜூலை 23ம் தேதி மொத்தம் 13 நிறுவனங்கள் டிவிடெண்ட் வழங்குகின்றன. குறிப்பாக ஐசிஆர்ஏ நிறுவனம் இறுதி டிவிடெண்ட் ரூ.70 + சிறப்பு டிவிடெண்ட் ரூ.35 என மொத்தம் ரூ.105 வழங்குகிறது. Esab India நிறுவனம் ரூ.25 வழங்குகிறது.

சொந்த வீடு.. பெரிய ஆபத்து! மிடில் கிளாஸ் என்ன தான் செய்ய வேண்டும்? ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன்!

சொந்த வீடு.. பெரிய ஆபத்து! மிடில் கிளாஸ் என்ன தான் செய்ய வேண்டும்? ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன்!

முக்கிய நாள்

இந்த வாரம் வெள்ளிக்கிழமை தான் ரொம்பவே முக்கியமான வர்த்தக நாளாக கருதப்படுகிறது. அன்று மட்டும் 34 நிறுவனங்கள் டிவிடெண்ட் வழங்குகின்றன. மேலும், 2 நிறுவனங்கள் ஸ்டாக் ஸ்பிலிட் செய்கிறது. இது தவிர ஒரு நிறுவனம் போனஸ் மற்றும் பங்கு பிரிப்பு இரண்டையும் செய்கிறது. அதில் அதிகபட்சமாக அபோட் இந்தியா நிறுவனம் இறுதி டிவிடெண்ட் ரூ.525 + சிறப்பு டிவிடெண்ட் ரூ.131 என மொத்தம் 656 ரூபாய் வழங்குகிறது. இது தவிர வோல்டாம் பி டிரான்ஸ்ஃபார்மர்கள் – ரூ.100, ஹீரோ மோட்டோகார்ப் – ரூ.75, திவிஸ் லேப்- ரூ.30, பார்தி ஏர்டெல் – ரூ.24 டிவிண்டெண்ட் வழங்குகிறது.

இது தவிர காலிண்ட் (Kalind) நிறுவனம் 1:2 போனஸ் பங்குகளை வழங்குவதுடன், ரூ.10 பேஸ் வேல்யூ இருக்கும் பங்குகளை ரூ.2 ஆக பிரிக்கிறது. அதேபோல், பிஎஸ் ராஜ் ஸ்டீல்ஸ் நிறுவனமும் ரூ.10 முகப்பு மதிப்புள்ள பங்குகளை ரூ.2 ஆகப் பிரிக்கும் ஸ்டாக் ஸ்பிலிட் மேற்கொள்கிறது. அதாவது இந்த நிறுவனங்களின் பங்குகள் உங்கள் வசம் 10 இருந்தால் அது இப்போது ஸ்டாக் ஸ்பிலிட்டிற்கு பிறகு 50ஆக மாறிவிடும்.

“யாரும் வாங்க மாட்டார்கள்..” தங்கம், வெள்ளி எப்படி இருக்கும்? உடைத்து பேசிய ஆனந்த் சீனிவாசன்

கவனம்

முதலீட்டாளர்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ரெக்கார்டு தேதிக்கு முன்பாகவே பங்குகளை வாங்கியிருக்க வேண்டும். ரெக்கார்டு தேதியன்று அந்த பங்குகளை டீமேட் கணக்கில் இருந்தால் மட்டுமே டிவிடெண்ட், போனஸ் அல்லது பங்கு பிரிப்பு போன்றவை கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்

English summary

Stock market investors to note as 88 listed companies have record dates for dividends, bonus shares, stock splits(இந்திய பங்குச்சந்தை முதலீடுகள்): All things to know about stock market investment

Read More

Previous Post

கோடிக்கணக்கில் தடுத்து வைப்புக் கட்டணம்! துறைமுகத்தில் கைவிடப்பட்ட சொகுசு வாகனங்கள்

Next Post

Post Office Scheme | ரூ.5 லட்சம் கிடைக்கும்.. போஸ்ட் ஆபிஸ் சூப்பர் ஹிட் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க! | வணிகம் போட்டோகேலரி

Next Post
Post Office Scheme | ரூ.5 லட்சம் கிடைக்கும்.. போஸ்ட் ஆபிஸ் சூப்பர் ஹிட் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க! | வணிகம் போட்டோகேலரி

Post Office Scheme | ரூ.5 லட்சம் கிடைக்கும்.. போஸ்ட் ஆபிஸ் சூப்பர் ஹிட் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin