போஸ்ட் ஆபிஸ் நேர வைப்புத் திட்டம் (Post Office Time Deposit Scheme), பாதுகாப்பான முதலீடு மற்றும் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களுக்காகப் பிரபலமானது. தற்போது, இத்திட்டம் அதிகபட்சமாக 7.50 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இருப்பினும், முதலீட்டுக் காலத்தைப் பொறுத்து வட்டி விகிதம் மாறுபடுகிறது. 1 ஆண்டு கால வைப்பு – 6.90% வட்டி, 2 ஆண்டு கால வைப்பு – 7.00% வட்டி, 3 ஆண்டு கால வைப்பு – 7.10% வட்டி மற்றும் 5 ஆண்டு கால வைப்பு – 7.50% வட்டி ஆகும்.


