• Login
Tuesday, October 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஒடிசாவில் ரூ.169 கோடியில் ஆர்.பி.ஐ.தரவு மையம்; பிரதமர் மோடி திறந்து வைத்தார்… | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
October 26, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
ஒடிசாவில் ரூ.169 கோடியில் ஆர்.பி.ஐ.தரவு மையம்; பிரதமர் மோடி திறந்து வைத்தார்… | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புவனேஷ்வர், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்.பி.ஐ.) ரூ.169 கோடி மதிப்பிலான தரவு மையம் மற்றும் சைபர் பாதுகாப்புப் பயிற்சி நிறுவனத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

பிரம்மாண்ட தரவு மையம்
ஒடிசாவின் ஜட்னி பகுதியில் உள்ள இன்போ வேலி-II வளாகத்தில் 18.55 ஏக்கர் பரப்பளவில் இந்தத் தரவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 22-ந்தேதி, அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸால் நாட்டப்பட்டது.

இந்த மையத்தில், முக்கியத்துவம் வாய்ந்த பணப்பரிவர்த்தனை மற்றும் பணப்பட்டுவாடா தொடர்பான அமைப்புகள் உள்ளிட்ட ரிசர்வ் வங்கியின் முக்கியத் திட்டங்களுக்கான கணினி உள்கட்டமைப்புகள் செயல்படும்.

வங்கியின் கணினித் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், பாதுகாப்பான, தடையற்ற, விரிவாக்கத்துக்கு ஏற்ற நவீன தொழில்நுட்பச் சூழலை உருவாக்கும் வகையில் இந்த மையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் நிதிச் சேவைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு
இந்தியாவில் டிஜிட்டல் நிதிச் சேவைகளின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அவற்றின் செயல்திறன், நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த இந்தத் தரவு மையம் உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாட்டின் தொழில்நுட்ப அடிப்படையிலான நிதிப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு வலுவான டிஜிட்டல் அடித்தளமாக இந்த மையம் அமையும் என்று கூறினார்.

சைபர் தாக்குதல்களை எதிர்கொள்ள பயிற்சி
தரவு மையத்துடன் திறந்து வைக்கப்பட்டுள்ள சைபர் பாதுகாப்புப் பயிற்சி நிறுவனம், இணையவழிப் பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்துவதற்கான பிரத்யேக மையமாகச் செயல்படும்.

இங்கு சைபர் பாதுகாப்பு, நிறுவனங்களின் தொழில்நுட்பக் கட்டமைப்புகள் தொடர்பான பயிற்சிகள், ஆராய்ச்சிகள் மற்றும் நிதித்துறை முழுவதும் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் சூழலில், இணையவழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தேவையான திறன்களை வளர்ப்பதில் இந்த நிறுவனம் முக்கியப் பங்கு வகிக்கும்.

ஒடிசாவை தேர்வு செய்தது ஏன்?
இந்தத் தரவு மையத்தை அமைப்பதற்காக ஜட்னி பகுதி தேர்வு செய்யப்பட்டதற்கும் முக்கியக் காரணங்கள் உள்ளன.

நிலநடுக்க அபாயம் அதிகமுள்ள பகுதிகள் மற்றும் சர்வதேச எல்லைகளை ஒட்டிய அதிக ஆபத்துள்ள பகுதிகளிலிருந்து விலகி இருப்பதால், இயற்கைப் பேரிடர்கள் மற்றும் புவிசார் அரசியல் சார்ந்த பாதிப்புகளுக்கான அபாயத்தைக் குறைக்கும் வகையில் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நவி மும்பைக்கு அடுத்தபடியாக ஒடிசாவில் 2-வது மையம்
ஜட்னியில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தரவு மையம், நவி மும்பையில் உள்ள மையத்துக்கு அடுத்தபடியாக அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது தரவு மையம் என்று ஒடிசா முதல்-மந்திரி மோகன் சரண் மாஜி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், இந்தத் தரவு மையம் ஒடிசாவின் வளர்ச்சிப் பயணத்துக்கு மேலும் வலுசேர்க்கும் என்று குறிப்பிட்டார்.

2024-ம் ஆண்டு ஒடிசாவில் பா.ஜ.க. அரசு அமைந்த பின்னர், பிரதமர் மோடி ஒடிசா மாநிலத்துக்கு வருவது இது 9-வது முறை என்றும் அவர் தெரிவித்தார்.

பலத்த பாதுகாப்பு
பிரதமர் மோடி இன்று மாலை 4.15 மணியளவில் இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் குர்தா பகுதிக்குச் சென்ற அவர், பின்னர் சாலை வழியாக ஆர்.பி.ஐ. தரவு மையத்தை அடைந்தார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு சுமார் 2,100 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், மாலை 5.40 மணி முதல் 6.40 மணி வரை தரவு மையத்தையும் விமான நிலையத்தையும் இணைக்கும் சாலையில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்தப் புதிய தரவு மையமும் சைபர் பாதுகாப்புப் பயிற்சி நிறுவனமும் இந்தியாவின் டிஜிட்டல் நிதிக் கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன், எதிர்காலத் தொழில்நுட்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான முக்கிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, ஒடிசா கவர்னர் பிரஜ்மோகன் ராம், முதல்-மந்திரி மோகன் சரண் மாஜி, மத்திய பழங்குடியினர் நலத்துறை மந்திரி ஜுவல் ஓரம் மற்றும் துணை முதல்-மந்திரிகள் கனக் வர்தன் சிங் தியோ, பிரவதி பரிடா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



Read More

Previous Post

தண்ணீரில் 40 கி.மீ. சென்ற பைக்… கின்னஸ் சாதனை படைத்த சீனர்! | World News (உலக செய்திகள்)

Next Post

மோதல்கள் தீவிரமடையக்கூடும்…! உடனே வெளியேறுங்கள்: அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கை

Next Post
மோதல்கள் தீவிரமடையக்கூடும்…! உடனே வெளியேறுங்கள்: அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கை

மோதல்கள் தீவிரமடையக்கூடும்...! உடனே வெளியேறுங்கள்: அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin