ரியாத் விமான நிலையம் பகுதியளவு மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ள நிலையில், சவூதி விமான நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளதுடன் குடிமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
அவசரத் தேவையின்றி பணியாற்றும் அரசு ஊழியர்களையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் சவுதி அரேபியாவை விட்டு வெளியேறுமாறும் அமெரிக்கா எச்சரித்துள்ளது
இந்த உத்தரவு அக்டோபர் 23 முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பாதுகாப்பு எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது.
மோதல்கள் விரைவாக தீவிரமடையக்கூடும்
விமான நிலையங்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகள் மீதான ஹவுத்திகளின் தாக்குதல்களுக்கு மத்தியில் பாதுகாப்பு குறித்த கவலைகளுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 25 அன்று தூதரகம் வெளியிட்ட பாதுகாப்பு எச்சரிக்கையின்படி, இந்த உத்தரவு அக்டோபர் 23 முதல் நடைமுறைக்கு வந்தது.
ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுத்தி படைகளின் தாக்குதல்களால் பொதுமக்களுக்கு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதையும், பயண நடவடிக்கைகளில் கடுமையான பாதிப்புகள் உண்டாகியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள அந்த எச்சரிக்கை, மோதல்கள் விரைவாக தீவிரமடையக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

