Last Updated:
ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி திரில் வெற்றிபெற்றது.
ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி திரில் வெற்றிபெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜோஷ் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த மிச்செல் மார்ஷும், நிக்கோலஸ் பூரணும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில், நிக்கோலஸ் பூரண் 63 ரன்களையும், மிச்செல் மார்ஷ் 44 ரன்களையும் எடுத்தனர். மேலும், ஹிம்மத் சிங் 40 ரன்களையும், எய்டன் மார்க்ரம் 31 ரன்களையும் சேர்த்தனர்.
இதன்மூலம், லக்னோ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்களை சேர்த்தது. இதனைத் தொடர்ந்து, 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ரியான் ரிக்கெல்டனும், ரோஹித் சர்மாவும் பந்துகளை விளாசி தள்ளினர்.
ரியான் ரிக்கெல்டன் 32 பந்துகளில் 83 ரன்களையும், ரோஹித் சர்மா 44 பந்துகளில் 84 ரன்களையும் குவித்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்களில் நமன் திர் நிலைத்து ஆடினார். 18.4 ஓவர்களில் இலக்கை எட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதுவரை 10 போட்டிகளில் பங்கேற்றுள்ள மும்பை அணி, 3 போட்டிகளில் வெற்றிபெற்று, புள்ளிப் பட்டியலில் 9ஆவது இடத்தில் நீடிக்கிறது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu


