• Login
Thursday, October 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஐபிஎல்-லில் வரலாற்று சாதனை: ரூ. 20,000 கோடி சந்தை மதிப்புடன் முதலிடம் பிடித்தது மும்பை இந்தியன்ஸ்! | IPL News (ஐபிஎல் செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 29, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஐபிஎல்-லில் வரலாற்று சாதனை: ரூ. 20,000 கோடி சந்தை மதிப்புடன் முதலிடம் பிடித்தது மும்பை இந்தியன்ஸ்! | IPL News (ஐபிஎல் செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 29, 2026 5:29 PM IST

சர்வதேச அளவில் தொழில்முனைவோர் முதலீடு செய்ய விரும்பும் மிகச் சிறந்த சொத்தாக ஐபிஎல் அணிகள் திகழ்கின்றன.

மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரின் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி, சுமார் 2.1 பில்லியன் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 20,008.8 கோடி) சந்தை மதிப்​புடன் உலகின் மிகவும் மதிப்புமிக்க ஐபிஎல் அணியாக உருவெடுத்து சாதனை படைத்துள்ளது.

‘ஸ்போர்டிகோ’ (Sportico) வெளியிட்ட சர்வதேச விளையாட்டு அணிகளின் மதிப்பீட்டு அறிக்கையின்படி, ஐபிஎல் தொடரில் உள்ள அனைத்து 10 அணிகளின் குறைந்தபட்ச மதிப்பும் தற்போது 1.5 பில்லியன் (ரூ. 14,292 கோடி) என்ற பிரம்மாண்ட நிலையை எட்டியுள்ளது.

சந்தை மதிப்பு தரவரிசையில், மும்பை இந்தியன்ஸ் முதலிடத்தைப் பிடிக்க, அதைத் தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) 1.85 பில்லியன் (ரூ. 17,626.8 கோடி) மதிப்புடன் இரண்டாம் இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) 1.75 பில்லியன் (ரூ. 16,674 கோடி) மதிப்புடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 1.73 பில்லியன், டெல்லி கேபிடல்ஸ் 1.7 பில்லியன், ராஜஸ்தான் ராயல்ஸ் 1.65 பில்லியன், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 1.62 பில்லியன், குஜராத் டைட்டன்ஸ் 1.58 பில்லியன் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் 1.53 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற சந்தை மதிப்பீட்டைக் கொண்டுள்ளன.

ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்ட 2008-ஆம் ஆண்டிலிருந்து கணக்கிட்டால், அணிகளின் சந்தை மதிப்பு சுமார் 1,800% வரை அபார வளர்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்காவின் புகழ்பெற்ற என்.எஃப்.எல் (NFL – 800%) மற்றும் என்.பி.ஏ (NBA – 1,700%) ஆகிய தொடர்களின் வளர்ச்சியைக் காட்டிலும் இது மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் அணிகளின் பிரதான வருவாய் பிசிசிஐ-யின் (BCCI) மத்திய வருவாய்ப் பகிர்வு முறையின் மூலமே கிடைக்கிறது. ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் ஊடக உரிமைகள் மூலம் கிடைக்கும் வருவாயில் பிசிசிஐ சுமார் 90% தொகையை 10 அணிகளுக்கும் சமமாகப் பகிர்ந்து அளிப்பதால், ஒவ்வொரு அணியும் ஆண்டிற்கு தோராயமாக 50 – 55 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ. 476.4 – 523 கோடி) வரை பெறுகின்றன. இதுதவிர, டிக்கெட் விற்பனை, மைதான விளம்பரங்கள், பிராண்ட் ஸ்பான்சர்ஷிப்கள் மற்றும் பிரத்யேகப் பொருட்கள் விற்பனை மூலமும் கணிசமான வருமானம் கிடைக்கிறது.

2026-ஆம் ஆண்டின் ஐபிஎல் சீசனில் ஒரு அணியின் சராசரி மொத்த வருவாய் 74.4 மில்லியனாக (ரூ. 708.9 கோடி) பதிவாகியுள்ளது. வீரர்களுக்கான ஏலத் தொகை வரம்பு (Salary Cap) மற்றும் உள்கட்டமைப்புச் செலவுகள் குறைவாகக் கட்டுப்படுத்தப்படுவதால், அணிகள் 30%-க்கும் அதிகமான லாப வரம்பைக் (Profit Margin) தக்கவைத்துக் கொள்கின்றன. இதன் காரணமாகவே சர்வதேச அளவில் தொழில்முனைவோர் முதலீடு செய்ய விரும்பும் மிகச் சிறந்த சொத்தாக ஐபிஎல் அணிகள் திகழ்கின்றன.

Read More

Previous Post

வங்கி கணக்கில் நாளை ரூ. 2,000 வரவு வைக்க இருக்கிறது மத்திய அரசு! தீபாவளிக்கு முன் பி.எம். கிசான் நிதி விடுவிப்பு | இந்தியா போட்டோகேலரி

Next Post

Gold News | பாதரசத்தில் இருந்து 99% தூய தங்கம் உருவாக்க முடியுமா? ராஜஸ்தான் விஞ்ஞானி கூறும் தகவலால் அதிர்ச்சி.! | வணிகம் போட்டோகேலரி

Next Post
Gold News | பாதரசத்தில் இருந்து 99% தூய தங்கம் உருவாக்க முடியுமா? ராஜஸ்தான் விஞ்ஞானி கூறும் தகவலால் அதிர்ச்சி.! | வணிகம் போட்டோகேலரி

Gold News | பாதரசத்தில் இருந்து 99% தூய தங்கம் உருவாக்க முடியுமா? ராஜஸ்தான் விஞ்ஞானி கூறும் தகவலால் அதிர்ச்சி.! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin