Last Updated:
இந்தியாவின் எரிபொருள் சார்பு நிலை குறித்துப் பேசிய அவர், பெட்ரோலுக்கு மாற்றாக எத்தனால் உருவெடுக்கும் என்றும், இது 22 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இறக்குமதி சுமையைக் குறைக்க உதவும் என்றும் கூறினார்.
வாகனங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்றாக, 100 சதவீத எத்தனால் எரிபொருளை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, 100 சதவீத எத்தனால் பயன்படுத்த அனுமதியளிக்கும் கோப்பில் வெள்ளிக்கிழமையன்று கையெழுத்திட்டதாக தெரிவித்தார். இந்தியாவின் எரிபொருள் சார்பு நிலை குறித்துப் பேசிய அவர், பெட்ரோலுக்கு மாற்றாக எத்தனால் உருவெடுக்கும் என்றும், இது 22 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இறக்குமதி சுமையைக் குறைக்க உதவும் என்றும் கூறினார்.
மேலும், மாருதி சுசூகி நிறுவனத்தின் வேகன் ஆர் மாடலில் பெட்ரோல் அல்லது எத்தனாலில் இயங்கும் வகையிலான மாடலை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றதாக குறிப்பிட்ட மத்திய அமைச்சர், இதேபோல மற்ற நிறுவனங்களும் கார் மட்டுமின்றி இருசக்கர வாகனத்திலும் flex fuel முறைக்கு விரைவாக மாறுவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
எத்தனால் பயன்பாடு குறித்து முதன்முதலில் தாம் பேசியபோது பலர் தன்னை கிண்டல் செய்தார்கள் என்றும் நிதின் கட்கரி குறிப்பிட்டார்.


