• Login
Thursday, July 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இதுக்காக தான் 18 ஆண்டு உறவை துண்டித்தாரா.. இங்கிலாந்து பயிற்சியாளரான ஸ்டீபன் பிளமிங்! | CSK: CSK Ex Coach Stephen Fleming Set to Take Over as England Test Team Head Coach

GenevaTimes by GenevaTimes
July 30, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
இதுக்காக தான் 18 ஆண்டு உறவை துண்டித்தாரா.. இங்கிலாந்து பயிற்சியாளரான ஸ்டீபன் பிளமிங்! | CSK: CSK Ex Coach Stephen Fleming Set to Take Over as England Test Team Head Coach
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Cricket

oi-Yogeshwaran Moorthi

Time
Published: Thursday, July 30, 2026, 15:26 [IST]

மும்பை: சிஎஸ்கே அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டில் மட்டுமே பயிற்சியாளராக பணியாற்றி வந்த பிளமிங், தற்போது தேசிய அணியின் பயிற்சியாளராக செயல்பட இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஐபிஎல் தொடரில் 18 ஆண்டுகளாக சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டவர் ஸ்டீபன் பிளமிங். தோனிக்கு மிகச்சிறந்த ஆசானாக இருந்து சிஎஸ்கே அணி உச்சத்தை எட்ட காரணமாக அமைந்தார். அதேபோல் தோனி – ஸ்டீபன் பிளிமிங் கூட்டணி ஐபிஎல் தொடரில் பல்வேறு உயரத்தை எட்டின. சிஎஸ்கே அணியின் இந்த ஸ்டைல் மற்ற அணிகளுக்கும் ஒரு ரோல் மாடலாக அமைந்தது.

CSK

ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேறவில்லை. இதனால் ரசிகர்கள் மத்தியில் பிளமிங் மீது கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது. ஆனால் மேஜர் லீக் தொடரில் டிஎஸ்கே அணி அடைந்த தோல்விக்கு பின், சிஎஸ்கே மற்றும் பிளமிங் இடையிலான உறவு முடிவுக்கு வந்தது.

இதனால் சிஎஸ்கே அணியின் புதிய பயிற்சியாளராக யார் நியமனம் செய்யப்படுவர் என்ற கேள்விகள் எழுந்தன. அதேபோல் ஸ்டீபன் பிளமிங்கின் அடுத்த திட்டம் என்னவாக இருக்கும் என்றும் பேச்சுகள் எழுந்தன. இந்த நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பிரெவிஸ் அல்ல.. ஹர்திக் பாண்டியா மூலம் ஆட்டத்தை ஆடும் சிஎஸ்கே.. யாரை தாரை வார்க்கிறது சென்னை அணி?

பிரெவிஸ் அல்ல.. ஹர்திக் பாண்டியா மூலம் ஆட்டத்தை ஆடும் சிஎஸ்கே.. யாரை தாரை வார்க்கிறது சென்னை அணி?

இதனை இங்கிலாந்து ஊடகங்களும் உறுதி செய்துள்ளன. அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து ஜாம்பவான் பீட்டர்சனும் வரவேற்றுள்ளார். அண்மையில் இங்கிலாந்து டெஸ்ட் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து பிரண்டன் மெக்கல்லம் நீக்கப்பட்டார். அந்த பொறுப்புக்கு ஸ்டீபன் பிளமிங் கொண்டு வரப்பட்டு இருக்கிறார். இங்கிலாந்து அணி நிர்வாகம் வழக்கமாக நியூசிலாந்து வீரர்களை அதிகமாகவே நம்பும்.

நம்பர் 1 இடத்தில் சுப்மன் கில்.. டாப் 5க்குள் விராட் கோலி, ரோகித் சர்மா.. அசத்திய வைபவ் சூர்யவன்ஷி!

நம்பர் 1 இடத்தில் சுப்மன் கில்.. டாப் 5க்குள் விராட் கோலி, ரோகித் சர்மா.. அசத்திய வைபவ் சூர்யவன்ஷி!

ஏனென்றால் இங்கிலாந்து மண்ணில் நியூசிலாந்து வீரர்கள் எப்போதும் சிறப்பாக விளையாடுவார்கள். அதேபோல் நியூசிலாந்து வீரர்கள் கவுண்டி அணிகளிலும் இருப்பார்கள். இதனால் ஸ்டீபன் பிளமிங்கின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அவரின் பயிற்சியின் கீழ் இங்கிலாந்து அணி எப்படி செயல்படும் என்பதும் விவாதமாக உள்ளது.

English summary

CSK: CSK Ex Coach Stephen Fleming Set to Take Over as England Test Team Head Coach

Read More

Previous Post

Tamilmirror Online || வாகனத்துக்குள்ளேயே சாரதி தன்னுயிரை மாய்த்துக்கொண்டார்

Next Post

SLS முத்திரை இல்லாத ஹெல்மெட் பயன்படுத்துகிறீர்களா? நாடு முழுவதும் அதிரடி சோதனை! – Sri Lanka Tamil News

Next Post
SLS முத்திரை இல்லாத ஹெல்மெட் பயன்படுத்துகிறீர்களா? நாடு முழுவதும் அதிரடி சோதனை! – Sri Lanka Tamil News

SLS முத்திரை இல்லாத ஹெல்மெட் பயன்படுத்துகிறீர்களா? நாடு முழுவதும் அதிரடி சோதனை! - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin