
டி.கே.பி.கபில
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையிலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் வான் வாகனச் சாரதியாகப் பணிபுரியும் நபர் ஒருவர், ஜூலை 30ஆம் திகதி அதே தொழிற்சாலையானது வேறு பேருந்து ஒன்றில் ஏறித் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகக் கட்டுநாயக்க பொலிஸாரும் உறுதிப்படுத்தினர்.
இறந்தவர் கப்புகே தொன் சுரேஷ் காரியவசம் எனப்படும், 28 வயதுடைய மாஸ்பொத, போகொட பகுதியைச் சேர்ந்தவராவார். இவர் திருமணமாகியவர் ஆவார்.
இவர் ஜூலை 30ஆம் திகதி நண்பகல் எவரும் இல்லாத சந்தர்ப்பத்தைப் பார்த்து, குறித்த பேருந்துக்குள் ஏறித் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாகக் கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கட்டுநாயக்க பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் குலதுங்கவின் பணிப்புரையின் பேரில், சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் சுரவீரவின் மேற்பார்வையின் கீழ், பொலிஸ் கான்ஸ்டபிள் திசாநாயக்க இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

