• Login
Friday, September 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அரியணையில் இருந்து இறங்கிய ஜாம்பவான்.. வாரன் பபெட்-க்கு புதிய பதவி! | End of an Era: Warren Buffett Steps Down as Berkshire Hathaway Chairman at Age 96

GenevaTimes by GenevaTimes
September 18, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
அரியணையில் இருந்து இறங்கிய ஜாம்பவான்.. வாரன் பபெட்-க்கு புதிய பதவி! | End of an Era: Warren Buffett Steps Down as Berkshire Hathaway Chairman at Age 96
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அரியணையில் இருந்து இறங்கிய ஜாம்பவான்.. வாரன் பபெட்-க்கு புதிய பதவி!

பங்குச்சந்தை முதலீட்டில் கிங்மேக்கராக இருக்கும் வாரன் பஃபெட் தான் உருவாக்கிய பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து இன்று அதிகாரப்பூர்வமாக வெளியேற உள்ளார் என்ற இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

96 வயதான வாரன் பஃபெட், இனி இந்நிறுவனத்தின் Chairman Emeritus என்ற கௌரவப் பதவியில் மட்டும் இருப்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. எப்படி ரத்தன் டாடா அவர்கள் டாடா சன்ஸ் சேர்மன் பதவியில் இருந்து வெளியேறிய பின்பு Chairman Emeritus என்ற பதவியில் இருந்து டாடா டிரஸ்ட் வாயிலாக டாடா குழுமத்தை வழிநடத்தினாரோ அதேபோல் பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தை இயக்குநர்கள் குழுவில் இருந்து வழிநடத்த உள்ளார்.

அரியணையில் இருந்து இறங்கிய ஜாம்பவான்.. வாரன் பபெட்-க்கு புதிய பதவி!

இந்த வருட துவக்கத்தில் வாரன் பஃபெட் சிஇஓ பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதை பின்பு ஜனவரி 1, 2026 முதல் பெர்க்ஷயர் ஹாத்வே தலைமை நிர்வாக அதிகாரியாக கிரெக் ஏபெல் பொறுப்பேற்று நிர்வாகத்தை கவனித்து வந்தார்.

வாரன் பஃபெட் 90 வயதுக்கு பின்பும் நிறுவனத்தின் வர்த்தக முடிவுகளிலும், முதலீட்டு முடிவுகளிலும் மிகவும் ஷார்ப்பாக இருந்தார், ஆனால் அவருடைய நண்பர் சார்லி முங்கர் மறைவிற்கு பின்பு நிறுவனத்தை அடித்த தலைமுறையின் கைக்கு கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்தினார்.

உண்மையில் வாரன் பஃபெட் மற்றும் சார்லி முங்கர் இணைந்து கடந்த 10 வருடத்திற்கும் அதிகமாக இந்த 1 டிரில்லியன் டாலர் நிறுவனத்தை எப்படி அடுத்த தலைமுறைக்கு கைமாற்றுவது, நிர்வாகத்தை எப்படி வலிமையுடன் தொடர்வது என்பதை தீவிரமாக ஆலோசனை செய்து திட்டமிட்டனர்.

இதன் அடிப்படையில் தான் 2025 இறுதியில் சிஇஓ பதவியில் இருந்து விலகி கிரெக் ஏபெல்-ஐ சிஇஓ ஆக அறிவித்து படிப்படியாக தற்போது சேர்மன் ஆக வாரன் பபெட்டின் மகன் ஹாவர்ட் ஜி பபெட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 1993ஆம் ஆண்டு முதல் இந்த நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றி வரும் காரணத்தால் நிர்வாக மாற்றத்தில் எவ்விதமான தடுமாற்றமும் இருக்காது.

வாரன் பஃபெட்-ன் ஆரம்பக்கட்டத்தில் ஆதாவது 1950 முதல் பல ஆண்டுகளாகத் திவாலாகக் கூடிய நிலையில் இருக்கும் நிறுவனங்களை தேர்வு செய்வார், இதில் சிறு முதலீடு செய்தால் மீண்டு வர முடியுமா என்பதை யோசித்து முடியுமெனில் மொத்தமாக கைப்பற்றிவிடுவார். இந்த முதலீட்டு வழக்கத்தின் பெயர் Buying cigar butts என்று வாரன் பஃபெட் அழைப்பது உண்டு.

இந்த முதலீட்டு பார்மூலா அடிப்படையில் தான் கீகோ (GEICO – காப்பீடு), பிஎன்எஸ்எஃப் (BNSF – ரயில்வே), பெர்க்ஷயர் ஹாத்வே எனர்ஜி (மின்சாரம் மற்றும் எரிசக்தி), டெய்ரி குவீன் (Dairy Queen), டியூரசெல் (Duracell) மற்றும் பெஞ்சமின் மூர் (Benjamin Moore) போன்ற பல நிறுவனங்களை வாங்கி தற்போது பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தை மாபெரும் சாம்ராஜ்ஜியமாக மேம்பட்டு உல்ளது.

இதன் மூலம் பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனம் தற்போது இன்ஷூரன்ஸ், யுடிலிட்டீஸ், எனர்ஜி, உற்பத்தி, சேவைகள், ரயில் போக்குவரத்து, ரீடைல் மற்றும் ஃபைனான்ஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இயங்கி வருகிறது.

இது மட்டும் அல்லாமல் ஆப்பிள், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், கோகா-கோலா, மற்றும் பேங்க் ஆஃப் அமெரிக்கா போன்ற பல முன்னணி அமெரிக்க நிறுவனங்களில் முதலீடு செய்து பெரும் பங்குகளை வாங்கியுள்ளார் வாரன் பஃபெட். இதன் விளைவு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தனது பங்குதாரர்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 20%-க்கும் அதிகமான Book Value Growth கொடுத்து வருகிறது பெர்க்ஷயர் ஹாத்வே.

Share This Article

English summary

End of an Era: Warren Buffett Steps Down as Berkshire Hathaway Chairman at Age 96

End of an Era: Warren Buffett Steps Down as Berkshire Hathaway Chairman at Age 96 — அரியணையில் இருந்து இறங்கிய ஜாம்பவான்.. வாரன் பபெட்-க்கு புதிய பதவி!

Story first published: Friday, September 18, 2026, 19:35 [IST]

Other articles published on Sep 18, 2026

Read More

Previous Post

சஞ்சு சாம்சனை பெஞ்ச் செய்தேன்.. என் வாழ்வில் எடுத்த கடினமான முடிவு அதுதான்.. கம்பீர் ஓபன் டாக்! | Sanju Samson: Dropping Sanju Samson in England T20I Series Was My Toughest Decision as Coach, Says Gautam Gambhir

Next Post

மாநில ஆட்சியாளரை நீக்குவது சாதாரண விஷயம் அல்ல: நெகிரி செம்பிலான் அரச விவகாரத்தில் புத்ராஜெயாவில் பிரதமர் பேச்சு! | Makkal Osai

Next Post
மாநில ஆட்சியாளரை நீக்குவது சாதாரண விஷயம் அல்ல: நெகிரி செம்பிலான் அரச விவகாரத்தில் புத்ராஜெயாவில் பிரதமர் பேச்சு! | Makkal Osai

மாநில ஆட்சியாளரை நீக்குவது சாதாரண விஷயம் அல்ல: நெகிரி செம்பிலான் அரச விவகாரத்தில் புத்ராஜெயாவில் பிரதமர் பேச்சு! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin