• Login
Friday, August 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அம்பானிக்கு பச்சை கொடி காட்டிய செபி.. 9.5 லட்சம் கோடிக்கு குறிவைக்கும் ரிலையன்ஸ்..! | SEBI Approves Jio Platforms’ Mega ₹37,700 Crore IPO at ₹9.5 Lakh Crore Valuation

GenevaTimes by GenevaTimes
August 28, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
அம்பானிக்கு பச்சை கொடி காட்டிய செபி.. 9.5 லட்சம் கோடிக்கு குறிவைக்கும் ரிலையன்ஸ்..! | SEBI Approves Jio Platforms’ Mega ₹37,700 Crore IPO at ₹9.5 Lakh Crore Valuation
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அம்பானிக்கு பச்சை கொடி காட்டிய செபி.. 9.5 லட்சம் கோடிக்கு குறிவைக்கும் ரிலையன்ஸ்..!

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ஸ் தனது நிதியியல் சேவை பிரிவை தனியாக பிரித்து பட்டியலிட்டது மூலம் பெரிய அளவிலான லாபத்தையும், வர்த்தக விரிவாக்கத்தையும் செய்த நிலையில் அடுத்தடுத்து அனைத்து வர்த்தக பிரிவுகளையும் தனித்தனியாக பிரித்து முதலீட்டாளர்களுக்கு முழுமையான லாபத்தை கொடுக்க முடிவு செய்தார் முகேஷ் அம்பானி.

இந்த நிலையில் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் டெலிகாம் பிரிவான ஜியோ பிளாட்பார்ம்ஸ் கடந்த ஒரு வருடமாக ஐபிஓ வெளியிடுவதற்கான பணிகளை செய்து வருகிறது. ஜூன் 19ஆம் தேதி ரிலையன்ஸ் நிர்வாகம் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமாக செபியிடம் ஜியோ நிறுவனத்திற்காகன DRHP அறிக்கையை தாக்கல் செய்திருந்த நிலையில் இன்று ஒப்புதல் பெற்றுள்ளது.

அம்பானிக்கு பச்சை கொடி காட்டிய செபி.. 9.5 லட்சம் கோடிக்கு குறிவைக்கும் ரிலையன்ஸ்..!

இதன் மூலம் ஜியோ பிளாட்பார்ம்ஸ் ஐபிஓ-வில் பட்டியலிடுவதன் மூலம் சுமார் 37,700 கோடி ரூபாய் தொகையை 9.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் திரட்ட உள்ளது. இதன் வாயிலாக இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ-வாக ஜியோ இருக்கப்போகிறது.

ஜியோவின் இந்த ஐபிஓ ரிலையன்ஸ் முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய லாபத்தை அளிக்கும் நிகழ்வாகவும், இந்த ஆண்டின் முக்கிய மைல்கல்லாகவும் இருக்கும் என தெரிவித்தார். ஜியோ-வை தனியாக பிரித்து பட்டியலிடுவதன் மூலம் பல புதிய முதலீட்டு வாய்ப்புகளும், விரிவாக்கமும் செய்ய வாய்ப்புகள் கிடைக்கும் என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

இந்த ஐபிஓ-வில் சுமார் 27 கோடி பங்குகள் Fresh Issue ஆக அளிக்கப்பட உள்ளது. இதில் 50 சதவீத பங்குகளை வழக்கம் போல் நிறுவன முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்படும், குறைந்தபட்சம் 35 சதவீத பங்குகளாவது ரீடைல் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுக்குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை என்பதால் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் உள்ளது. டாடா குழுமம், அதானி குழுமம், பிர்லா குழுமம் ஆகியவை தனித்தனி வர்த்தக பிரிவை தனித்தனி நிறுவனமாக பட்டியலிட்டு இருக்கும் வேளையில், ரிலையன்ஸ் மட்டும் அனைத்து வர்த்தகத்தையும் ஹோல்டிங் நிறுவனத்தின் வாயிலாக வைத்துள்ளது. இதை உடைக்கும் வழியாகவே தற்போது ஐபிஓ வெளியிடும் பணிகளை துவங்கியுள்ளது. ஜியோவுக்கு அடுத்தாக ரிலையன்ஸ் ரீடைல் பிரிவை ஐபிஐ மூலம் பட்டியலிட அம்பானி திட்டமிட்டு வருகிறார்.

மேலும் இது Fresh issue என்பதால் தற்போது ஜியோ பிளாட்பார்மஸ்-ல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வைத்திருக்கும் 66.43 சதவீத பங்கீடு அளவு குறைய உள்ளது, ஆனாலும் தொடர்ந்து ஆதிக்க நிலையை அம்பானி குடும்பம் தக்கவைக்கும்.

ஒரு நிறுவனம் IPO-வில் Fresh Issue மூலம் முதலீட்ட ஈர்ப்பது என்றால் அந்த நிறுவனம் புதிதாகப் பங்குகளை (New Shares) உருவாக்கிப் பொதுமக்களுக்கு விற்பனை செய்வது ஆகும். இதனால் நிறுவனம் புதிய பங்குகளை உருவாக்கி வெளியிடும்.

அதாவது ஒரு நிறுவனம் 100 பங்குகளுடன் 1000 ரூபாய் மதிப்புடையது என்றால், 150 பங்குகளை அதே 1000 ரூபாய் மதிப்புக்கு உருவாக்கி. கூடுதலாக இருக்கும் 50 பங்குகளை பொது சந்தையில் விற்பனை செய்து முதலீட்டை திரட்டும்.

அப்படி செய்யும் போது ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்களின் பங்கு எண்ணிக்கை குறையாது, ஆனால் பங்கீட்டு அளவுகள் குறையும். இதை தான் தற்போது ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் ஜியோ ஐபிஓ-வில் செய்ய உள்ளது.

Share This Article

English summary

SEBI Approves Jio Platforms’ Mega ₹37,700 Crore IPO at ₹9.5 Lakh Crore Valuation

SEBI Approves Jio Platforms’ Mega ₹37,700 Crore IPO at ₹9.5 Lakh Crore Valuation — அம்பானிக்கு பச்சை கொடி காட்டிய செபி.. 9.5 லட்சம் கோடிக்கு குறிவைக்கும் ரிலையன்ஸ்..!

Story first published: Friday, August 28, 2026, 19:25 [IST]

Other articles published on Aug 28, 2026

Read More

Previous Post

பழங்குடி மேம்பாட்டு நிதியில் ரூ. 89 கோடி முறைகேடு? – கர்நாடகா அமைச்சர் பதவி விலகல் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

பினாங்கு – பாத்தாம் இடையே வாரம் 3 முறை நேரடி விமானங்கள்: சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்க வாய்ப்பு! | Makkal Osai

Next Post
பினாங்கு – பாத்தாம் இடையே வாரம் 3 முறை நேரடி விமானங்கள்: சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்க வாய்ப்பு! | Makkal Osai

பினாங்கு - பாத்தாம் இடையே வாரம் 3 முறை நேரடி விமானங்கள்: சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்க வாய்ப்பு! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin