அமாவாசை நாளில் நாம் ஒருசில பொருட்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது வீட்டில் ஒரு பெரிய அசம்பாவிதத்தை ஏற்படுத்திவிடும்.
துடைப்பம்
அமாவாசை நாளானது பித்ருக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாகும். இப்படிப்பட்ட நாளில் துடைப்பத்தை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். சாஸ்திரங்களின் படி, துடைப்பம் லட்சுமி தேவியுடன் தொடர்புடையது. அமாவாசை நாளில் துடைப்பத்தை வாங்குவது லட்சுமி தேவிக்கு கோபத்தை ஏற்படுத்தி, வருமானத்தில் தடையை ஏற்படுத்தும். அதோடு, இது வீட்டில் எதிர்மறை ஆற்றலை நிரம்பி, ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகரிக்கும். எனவே அமாவாசை நாளில் துடைப்பத்தை வாங்காதீர்கள்.
ஆல்கஹால்
அமாவாசை நாளானது பித்ருக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதால், இந்நாளில் ஆல்கஹாலை வாங்குவதையும், குடிப்பதையும் தவிர்க்குமாறு சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதே வேளையில் அமாவாசை நாளானது சனி பகவானுடன் தொடர்புடையது. எனவே இந்நாளில் மதுவை அருந்தினால், அது வீட்டில் எதிர்மறை ஆற்றலை கொண்டு வந்து, பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வைக்கும்.
இறைச்சிகள்
ஆல்கஹாலைப் போன்றே, அமாவாசை நாளில் இறைச்சியை வாங்குவதையோ, உட்கொள்வதையோ தவிர்க்க வேண்டும். அமாவாசை தினத்தில் எந்த ஒரு அசைவ உணவுகளை சாப்பிட்டாலும், அது ஜாதகத்தில் எதிர்மறையான விளைவை உண்டாக்குவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி, அமாவாசை நாளில் இறைச்சியை உட்கொள்வது சனியால் ஏற்படும் பிரச்சனைகளை இன்னும் அதிகரிக்கும்.
கோதுமை மாவு
அமாவாசை நாளில் கோதுமை மற்றும் கோதுமை மாவை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். அதுவும் புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையில் வாங்குவதை அறவே தவிர்க்க வேண்டும். ஒருவேளை அப்படி வாங்கி சமைத்து சாப்பிட்டால், அது அசுபமாக கருதப்படுகிறது.
தலையில் எண்ணெய் வைப்பதைத் தவிர்க்கவும்
அமாவாசை நாளில் தலையில் எண்ணெய் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். மாறாக இந்நாளில் எண்ணெயை தானம் செய்வது நல்லதாக கருதப்படுகிறது. அதுவும் இப்படி தானம் செய்யும் போது, அது சனி தோஷத்தில் இருந்து விடுபட உதவும்.
பூஜை பொருட்கள்
அமாவாசை நாளானது பித்ருக்களை வழிபட ஏற்ற நாளாகும். இந்நாளில் பத்தி, கற்பூரம், சாம்பிராணி, பூக்கள், சாமி சிலைகளுக்கு உரிய துணி போன்ற பூஜை பொருட்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். மாறாக, இந்நாளில் ஏழை எளியோருக்கு தானங்களை செய்தால், அதனால் புண்ணியம் சேர்வதோடு, வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.



