International
oi-Hema Vandhana
போர்ட்பிளேயர்: உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் பகுதியில் நடந்துள்ள இந்த சம்பவம் ஒட்டுமொத்த சோஷியல் மீடியாவையும் உலுக்கி வருகிறது. கல்யாணமான புதிதில் கணவரோடு ஹேப்பியாக தேனிலவு சென்று திரும்ப வேண்டிய ஒரு பெண்ணின் வாழ்க்கை, மாதவிடாய் காரணமாக இன்று நரகமாக மாறியுள்ளது. இதனால் சித்ரவதைகளுக்கும், தாங்க முடியாத சொல்லடிகளுக்கும் ஆளாகி, கதறி கொண்டிருக்கிறார் அந்த பரிதாப பெண்..!!
டெல்லியை சேர்ந்த நிகில் மிஸ்ரா என்பவருக்கும், கோரக்பூரை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 2023ம் ஆண்டு மே 30ம் தேதி திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது.

டெல்லி தம்பதி
பெண்ணின் அப்பா 20 லட்சம் ரூபாய் ரொக்கம், கார் மற்றும் 40 லட்சம் மதிப்பிலான பொருட்களை வரதட்சணையாக அள்ளி வழங்கி உள்ளார். ஆனால், ஆசை மகள் புகுந்த வீடு சென்ற நாளே, மாமியாரும் நாத்தனாரும் வரதட்சணை பொருட்கள் போதவில்லை என்று ஆரம்பித்து விட்டார்களாம்.. அந்த பெண்ணை மனநிறைவுடன் வாழ விடாமல் நித்தம் நித்தம் சித்ரவதையும் செய்ய துவங்கி உள்ளனர்.
இதையடுத்து, கல்யாணம் முடிந்து சரியாக ஒரு மாதம் கழித்து அதாவது ஜூலை 4ம் தேதி தம்பதியினர் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்குத் தேனிலவு சென்றிருக்கிறார்கள்.. ஆனால், எதிர்பாராத விதமாக அப்பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டு கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டுள்ளார்.. அத்துடன் கை கால் குடைச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கும் ஆளாகியிருக்கிறார்..
ஹனிமூன் – மாதவிடாய்
மனைவி மாதவிடாய் என்றதுமே, கணவன் நிகில் மிஸ்ரா கொதித்தெழுந்து விட்டார். “எனக்கு முன்கூட்டியே ஏன் சொல்லவில்லை? நீ வந்து என் தேனிலவு மூடையே ஸ்பாயில் செய்து விட்டாய்” என்று சொல்லி ஆக்ரோஷமாக நடந்து கொண்டுள்ளார்.. மனைவியை மாறி மாறி அறைந்து, உதைத்து, கீழே தள்ளி மூச்சுத் திணற செய்யும் அளவுக்கு, அளவிற்கு கழுத்தை நெரித்து கொல்ல முயன்றுள்ளார்.
இதனால் வலி தாங்க முடியாமல் அந்த பெண் அலறி துடிக்க, அந்த சத்தம் கேட்டு ரூமுக்கு வெளியே நின்றிருந்த ஹோட்டல் ஊழியர்கள் ஓடிவந்து தடுத்துள்ளார்கள்.. இதனால் அதிர்ஷ்டவசமாக அந்த உயிர் தப்பினார்.
ஆனால் அதற்கு பிறகும்கூட கொடுமைகள் ஓயவில்லை… நடந்த கொடுமைகளை எல்லாம் தன்னுடைய அப்பாவுக்கு போனில் அழுது கொண்டே சொன்னார் அந்த பெண்..
“எப்படியாவது உடனே டெல்லிக்கு வந்து என்னை உங்களுடனேயே நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு பேயிடுங்க..ப்பா” என்று கதறி அழுதார். அதேபோல, நிகில் மிஸ்ராவும், இனிமேல் அந்த பெண்ணுடன் வாழ போவதில்லை என்று தன்னுடைய அப்பாவுக்கு போனை போட்டு திட்டவட்டமாக சொல்லிவிட்டார்.
கதறி அழுத இளம்பெண்
பிறகு தம்பதி இருவரும் டெல்லிக்கு திரும்பினார்கள். ஆனால் வீட்டிற்குள் வந்ததுமே மாமியார் மற்றும் நாத்தனாரிடம் டார்ச்சர்கள் ஆரம்பமாகின.. . ஒருகட்டத்தில் ஜூலை 14 அன்று வெறும் 45 நாட்களிலேயே வீட்டைவிட்டு அடித்துத் துரத்தப்பட்டார் அப்பெண். வீட்டாரை சமரசம் செய்ய முயன்ற பெண்ணின் அப்பாவும், அங்கே அவமானப்படுத்தப்பட்டே விரட்டப்பட்டார்.
தான் பட்ட அவமானங்களை எல்லாம் தாங்கிக்கொண்டு நியாயம் கேட்டு போலீஸ் ஸ்டேஷன் சென்றார் அந்த பரிதாபப்பெண்.. ஆனால், அவரது கண்ணீர் கோரிக்கை, காற்றில் பறக்கவிடப்பட்டது. உள்ளூர் போலீசார் அந்த புகாரைப் வாங்க மறுத்து அலட்சியப்படுத்தியிருக்கிறார்கள்.. ஆனாலும் மனம் தளராத அந்த பெண், கோரக்பூர் மூத்த காவல் கண்காணிப்பாளர் (SSP) அலுவலகத்துக்கு சென்று, புகார் தந்தார். அதற்கு பிறகே, இதுகுறித்த புகார் எடுத்து கொள்ளப்பட்டது.
காவல்துறை விசாரணை
ஒருவழியாக பெண்ணின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, கணவன் நிகில் மிஸ்ரா, மாமியார் மற்றும் நாத்தனார் மீது போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளார்கள்.. இனிதான் விசாரணை ஆரம்பமாகும் என தெரிகிறது..
காதல் தேனிலவாக தொடங்கி ரத்தக்கறையில் முடிந்துபோன இந்த சோகம், வரதட்சணை வெறியும் மனிதாபிமானமற்ற தன்மையும் இன்றும் எப்படி பெண்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்குகிறது என்பதை உலுக்கி சொல்லியிருக்கிறது…!!

