• Login
Thursday, August 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

LPG சிலிண்டர் இணைப்பை PNG இணைப்பாக மாற்றினால் சலுகை: மத்திய அரசு அதிரடி..!! | LPG to PNG Shift: Government Launches New Incentive Scheme for Households; Check Benefits and Effective Date

GenevaTimes by GenevaTimes
August 19, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
LPG சிலிண்டர் இணைப்பை PNG இணைப்பாக மாற்றினால் சலுகை: மத்திய அரசு அதிரடி..!! | LPG to PNG Shift: Government Launches New Incentive Scheme for Households; Check Benefits and Effective Date
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


LPG சிலிண்டர் இணைப்பை PNG இணைப்பாக மாற்றினால் சலுகை: மத்திய அரசு அதிரடி..!!

இந்தியாவில் கோடிக்கணக்கான குடும்பங்கள் எல்பிஜி சிலிண்டர் இணைப்பை பெற்றுள்ளன. இதன் மூலம் தான் சமையலே செய்யப்படுகிறது. உஜ்வாலா போன்ற பல திட்டங்கள் நாட்டின் மூலைமுடுக்கெங்கும் எல்பிஜி சிலிண்டர் இணைப்பை கொண்டு சேர்த்துள்ளன.

அண்மையில் ஈரான் போர் காரணமாக நாட்டில் கடுமையான எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் சிலிண்டர் புக்கிங்கில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அதே வேளையில் எல்பிஜி-க்கு மாற்றாக பிஎன்ஜி இணைப்புக்கு மாற மக்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். எல்பிஜிக்கு நாம் வெளிநாடுகளை சார்ந்திருப்பதால் தான் இந்த பிரச்சினை. இதுவே பிஎன்ஜி என்றால் நம் நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது எனவே அதன் விநியோகத்தில் எந்த பிரச்சினையும் இல்லை.

LPG சிலிண்டர் இணைப்பை PNG இணைப்பாக மாற்றினால் சலுகை: மத்திய அரசு அதிரடி..!!

பிஎன்ஜி என்பது வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயுவை விநியோகம் செய்வது ஆகும். மக்கள் தூய்மையான மற்றும் மலிவான சமையல் எரிபொருளை பயன்படுத்துவதை உறுதி செய்வதற்கு மத்திய அரசு புதிய ஊக்கத்தொகை திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் வரும் செப்டம்பர் 1, 2026 முதல் அமலுக்கு வருகிறது.

இந்தியாவில் தற்போது சுமார் 1.74 கோடி வீட்டு உபயோக பிஎன்ஜி இணைப்புகள் உள்ளன. இதனை இன்னும் விரிவாக்கம் செய்ய நகர்ப்புற எரிவாயு விநியோக (City Gas Distribution – CGD) நிறுவனங்கள் செயலற்ற நிலையில் அல்லது பில் செய்யப்படாமல் உள்ள இணைப்புகளை செயல்பாட்டிற்கு கொண்டு வரவும், புதிய பகுதிகளுக்கு நெட்வொர்க்கை விரிவுபடுத்தவும் ஊக்கத்தொகை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

Incentive Scheme for Promotion of Domestic PNG Connections என்ற திட்டத்தின் கீழ், தகுதியான சிஜிடி நிறுவனங்கள் தங்களது எல்லை பகுதிகளில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி ஒவ்வொரு புதிய பில் செய்யப்பட்ட பிஎன்ஜி இணைப்புக்கும், கூடுதலாக 200 நிலையான கன மீட்டர் (SCM) உள்நாட்டில் உற்பத்தியாகும் குறைந்த விலை APM எரிவாயுவை பெற அந்த நிறுவனம் தகுதி பெறும். இந்த கூடுதல் எரிவாயு ஒதுக்கீடு மூலம், சிஜிடி நிறுவனங்கள் தங்களது சிஎன்ஜி போக்குவரத்து பிரிவிற்கு வாங்கும் விலையுயர்ந்த திரவ இயற்கை எரிவாயுவிற்கு பதிலாக இதை பயன்படுத்தி ஒட்டுமொத்த செலவை குறைக்கலாம்.

இந்த சேமிப்பு காரணமாக, PNG இணைப்புக்கான மூலதன செலவில் நிறுவனங்கள் கவனம் செலுத்த முடியும். இதனால் இந்த நிறுவனங்கள் கூடுதல் ஆர்வத்துடன் புதிய இணைப்புகளை வழங்கும். இந்த திட்டம் அடுத்த ஆறு மாதங்களுக்கு இரண்டு தவணைகளாக செயல்படுத்தப்படவுள்ளது.

எல்பிஜி சிலிண்டர்களை போல புக் செய்வது, சேமித்து வைப்பது அல்லது மாற்றுவது போன்ற சிரமங்கள் பிஎன்ஜி-இல் கிடையாது. நிலத்தடி குழாய்கள் மூலம் சீரான விநியோகம் இருக்கும். நம் சமையல் அறைக்கே இது வந்துவிடும். இத்துடன் மீட்டர் ஒன்றை பொருத்துவார்கள், அதில் எவ்வளவு பயன்படுத்தி இருக்கிறோம் என்பதை பொறுத்து மட்டுமே கட்டணம் செலுத்தினால் போதும்.

எல்பிஜி சிலிண்டரை விட பிஎன்ஜி பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இது குறைந்த மாசுபாட்டை ஏற்படுத்துவதால், வீட்டிலுள்ள காற்று தரத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் கார்பன் உமிழ்வை குறைக்கிறது. நாடு முழுவதும் பிஎன்ஜி பயன்பாட்டை விரைவுபடுத்த இயற்கை எரிவாயு மீதான வாட் வரியை 5 சதவீமாகக் குறைக்க மாநில அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களுக்காக National PNG Drive 2.0 இயக்கமும், புதிய இணைப்புகளுக்கு விண்ணப்பிக்கவும் கண்காணிக்கவும் ஒரு ஒருங்கிணைந்த டிஜிட்டல் போர்ட்டலும் உருவாக்கப்பட்டுள்ளது.

Share This Article

English summary

LPG to PNG Shift: Government Launches New Incentive Scheme for Households; Check Benefits and Effective Date

The Government of India has approved the Incentive Scheme for Promotion of Domestic PNG Connections, which will come into effect on September 1, 2026. The scheme aims to encourage City Gas Distribution companies to convert inactive or unbilled PNG connections into active. / LPG சிலிண்டர் இணைப்பை PNG இணைப்பாக மாற்றினால் சலுகை: மத்திய அரசு அதிரடி..!!

Story first published: Wednesday, August 19, 2026, 15:23 [IST]

Other articles published on Aug 19, 2026

Read More

Previous Post

அந்தமான் ஹனிமூனில் மாதவிடாய்.. “மூடையே ஸ்பாயில் பண்ணிட்ட” என கணவன் செய்த கொடூரம்.. அதிர்ந்த போலீஸ் | Andaman Honeymoon Turns Horrific.. Husband Attacks Wife After Her Period Spoils His Mood

Next Post

குடிநுழைவுத் துறை லோரி விபத்தில் பலியானவர்கள் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் மற்றும் அவரது மகள்கள்! | Makkal Osai

Next Post
குடிநுழைவுத் துறை லோரி விபத்தில் பலியானவர்கள் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் மற்றும் அவரது மகள்கள்! | Makkal Osai

குடிநுழைவுத் துறை லோரி விபத்தில் பலியானவர்கள் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் மற்றும் அவரது மகள்கள்! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin