Last Updated:
தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு நாளொன்றுக்கு 3 ஆயிரம் கன அடி காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு நாளொன்றுக்கு 3 ஆயிரம் கன அடி காவிரி நீரைத் திறந்துவிட, கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது..!
காவிரியில் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய உரிய நீரைப் பெற்றுத் தரக் கோரி, காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்தச் சூழலில், காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீரைத் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட காவிரி மேலாண்மை வாரியத்திற்குப் பரிந்துரை அளித்தது.
இதைத் தொடர்ந்து, பிற்பகலில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 60-ஆவது கூட்டம் நடைபெற்றது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் காவிரியில் திறக்கப்பட்ட நீர் தரவுகளின் அடிப்படையில் விவாதம் நடைபெற்றது. அப்போது, விநாடிக்கு 7 ஆயிரத்து 500 கன அடி நீர் திறக்க உத்தரவிடும்படி தமிழ்நாடு அதிகாரிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.


