Last Updated:
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ வெளியீட்டில் ஒரு கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெற்று உலக சாதனை படைத்துள்ளது. வரும் 28ஆம் தேதி பங்குச்சந்தையில் பங்குகள் பட்டியலிடப்படுகின்றன.
பொதுப் பங்கு வெளியீட்டில் ஒரு கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெற்று, உலகிலேயே அதிக விண்ணப்பங்கள் பெற்ற ஐபிஓ என்ற உலக சாதனையை ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் படைத்துள்ளது..!
ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் 30 ஆயிரத்து 213 கோடி ரூபாய் மதிப்பிலான பொதுப் பங்கு வெளியீட்டுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த புதன் அன்று தொடங்கியது.
விண்ணப்பங்கள் தொடங்கிய வெறும் 100 நிமிடங்களில் அனைத்துப் பங்குகளும் முன்பதிவு செய்யப்பட்டு, ஜியோ பிளாட்பார்ம்ஸ் புதிய வரலாறு படைத்தது.
அடுத்தடுத்த நாட்களிலும் விண்ணப்பங்கள் பல மடங்கு குவிந்த நிலையில், விண்ணப்பத்திற்கான கடைசி நாளான நேற்று 22.19 மடங்கு அளவிலான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதற்கு முன்பு, 2024ஆம் ஆண்டு வாரீ எனர்ஜீஸ் நிறுவனம் 97 லட்சத்து 30 ஆயிரம் விண்ணப்பங்களைப் பெற்றதே சாதனையாக இருந்தது. தற்போது அந்தச் சாதனையை ஜியோ முறியடித்துள்ளது. அதாவது, ஏறத்தாழ ஒன்றரை கோடி அளவிலான விண்ணப்பங்களை ஜியோ குவித்துள்ளது.
முதலீட்டாளர் பிரிவுகளில், அதிகபட்சமாக நிறுவன முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளின் அளவைவிட 70-க்கும் அதிகமான விண்ணப்பங்களும், நிறுவனமல்லாத முதலீட்டாளர்கள் பிரிவில் 14 மடங்கு அளவுக்கும், சில்லறை முதலீட்டாளர்கள் பிரிவில் 2.72 மடங்கு அளவுக்கும் விண்ணப்பங்கள் வந்துள்ளன.


