• Login
Wednesday, October 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அங்கிதா பண்டாரி கொலை வழக்கு; ஆளுநர் நியமனத்திற்கு எதிராக ராகுல் காந்தி! பின்னணி என்ன? | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 14, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
அங்கிதா பண்டாரி கொலை வழக்கு; ஆளுநர் நியமனத்திற்கு எதிராக ராகுல் காந்தி! பின்னணி என்ன? | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 14, 2026 9:23 PM IST

அங்கிதா பண்டாரி கொலை வழக்கில் தொடர்புடையதாக அவரது பெற்றோர் குற்றஞ்சாட்டும் துஷ்யந்த் கவுதமை சிக்கிம் ஆளுநராக நியமித்ததை எதிர்த்து டெல்லியில் நடக்கும் போராட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றார்.

அங்கிதா பண்டாரி & ராகுல் காந்தி
அங்கிதா பண்டாரி & ராகுல் காந்தி

தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில், 2022ஆம் ஆண்டு விடுதி வரவேற்பாளர் அங்கிதா பண்டாரி கொலை வழக்கில், அவரது பெற்றோர் குற்றஞ்சாட்டும் முன்னாள் பாஜக பொறுப்பாளர் துஷ்யந்த் கவுதமை சிக்கிம் ஆளுநராக நியமித்திருப்பதற்கு எதிராக போராட்டம் நடைபெற்றுவருகிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள விடுதி ஒன்றில் வரவேற்பாளராக பணியாற்றிவந்தவர் அங்கிதா பண்டாரி. இவர் 2022ஆம் ஆண்டு ஒரு கால்வாயில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இவரது கொலை வழக்கை தற்போது சிபிஐ விசாரித்துவருகிறது. அங்கிதா பண்டாரி கொலை வழக்கில் தற்போதைய சிக்கிம் ஆளுநர் துஷ்யந்த் கவுதமுக்கும் தொடர்பு இருக்கிறது என அவரது பெற்றோர் குற்றஞ்சாட்டிவருகின்றனர். இந்தப் பின்னணியில் தற்போது அவர் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கணேஷ் கொடியல், “அங்கிதா பண்டாரி கொலை வழக்கில் அவரது பெற்றோர் நேரடியாக குறிப்பிடும் துஷ்யந்த் கவுதமை ஆளுநராக நியமிப்பது அவரை காப்பாற்றும் செயல். ஆளுநருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது” எனத் தெரிவித்து ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

#WATCH | 2022 Ankita Bhandari murder case: Congress MP Priyanka Gandhi Vadra, along with Lok Sabha LoP Rahul Gandhi, meets Ankita Bhandari’s parents at India Gate in Delhi


They are protesting against the appointment of BJP leader Dushyant Kumar Gautam as the Governor of Sikkim https://t.co/bza7qwABP0

— ANI (@ANI) October 14, 2026

இந்நிலையில் இன்று டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் அங்கிதா பண்டாரி பெற்றோர், சிக்கிம் ஆளுநராக துஷ்யந்த் கவுதம் நியமிக்கப்பட்டதற்கு எதிராக போராட்டம் நடத்திவருகின்றனர். அப்படி போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அங்கிதா பண்டாரியின் பெற்றோரை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்தித்தார்.

#WATCH | Delhi | Ankita Bhandari murder case: Her father, Virendra Singh Bhandari, says, “Dushyant Kumar should be behind bars… I earnestly request the Honorable President not to appoint Dushyant Kumar as Governor until the CBI investigation is concluded.” https://t.co/tLIyiYMVb3


— ANI (@ANI)
October 14, 2026

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அங்கிதா பண்டாரியின் தந்தையான வீரேந்திர சிங் பண்டாரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “துஷ்யந்த் சிறையில் அடைக்கப்பட வேண்டும். சிபிஐ விசாரணை முடியும் வரை துஷ்யந்த்தை ஆளுநராக நியமிக்க வேண்டாம் என்று குடியரசுத் தலைவரிடம் நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

#WATCH | Delhi | Ankita Bhandari murder case: Her mother, Soni Devi, says, “We were deeply pained when we heard the news on the 12th that he (BJP leader Dushyant Kumar Gautam) has now been named Governor. I appeal to the Honorable President, who is herself a woman and will surely understand my sentiments, to halt the move to appoint this individual as Governor until the CBI investigation against him is concluded.”


— ANI (@ANI)
October 14, 2026

இதேபோல் அங்கிதா பண்டாரியின் தாய் சோனி தேவி, “பாஜக தலைவர் துஷ்யந்த் குமார் கௌதம் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை 12-ஆம் தேதி கேட்டபோது நாங்கள் மிகுந்த வேதனை அடைந்தோம். ஒரு பெண்ணாக எனது உணர்வுகளை புரிந்துகொள்ளக் கூடிய இடத்தில் இருக்கும் குடியரசுத் தலைவர், சிபிஐ விசாரணை முடியும் வரை, துஷ்யந்த் கௌதமை ஆளுநராக நியமிக்கும் நடவடிக்கையை நிறுத்திவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அங்கிதா பண்டாரியின் பெற்றோரை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் எம்.பி. பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்களும் சந்தித்தனர்.

Read More

Previous Post

ஆட்டுப்பட்டி பாலவீதியைப் புனரமைத்துத் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை!

Next Post

ஜியோ IPO-வுக்கு குவியும் உலகளாவிய முதலீடுகள்.. 108 பில்லியன் மதிப்பீட்டை இலக்கு வைக்கும் ரிலையன்ஸ்! | வணிகச் செய்திகள்

Next Post
ஜியோ IPO-வுக்கு குவியும் உலகளாவிய முதலீடுகள்.. 108 பில்லியன் மதிப்பீட்டை இலக்கு வைக்கும் ரிலையன்ஸ்! | வணிகச் செய்திகள்

ஜியோ IPO-வுக்கு குவியும் உலகளாவிய முதலீடுகள்.. 108 பில்லியன் மதிப்பீட்டை இலக்கு வைக்கும் ரிலையன்ஸ்! | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin