திருகோணமலையில் மக்கள், பெரும் போக்குவரத்து அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
திருகோணமலையில், தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவிக்குட்பட்ட மீரா நகர் கிராம
உத்தியோகத்தர் பிரிவில் 98 அரபா நகரிலிருந்து கிண்ணியாவிற்குச் செல்லும்
ஆட்டுப்பட்டி பாலவீதி தற்போது குன்றும் குழியுமாகக் காணப்படுகின்றது.
இதனால் அவ்வீதியைப் பயன்படுத்தும் பொதுமக்கள் பெரும் போக்குவரத்து அசௌகரியங்களை
எதிர்கொண்டு வருகின்றனர்.
பெருமளவிலான மக்கள்
கிண்ணியாவிற்குச் செல்வதற்காகப் பெருமளவிலான மக்கள் பயன்படுத்தும் இவ்வீதியின்
நிலைமையைக் கருத்திற்கொண்டு வீதியை விரைவாகப் புனரமைத்துத் தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தம்பலகாமம்
பிரதேச சபையின் தவிசாளரிடம் இது குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

