• Login
Wednesday, September 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

அகதிகள் அட்டையைக் காட்டி ‘பர்மிட்’ என ஏமாற்று வேலை: சிலாங்கூர் குடிநுழைவு துறையின் வலையில் சிக்கிய பெண்! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 9, 2026
in மலேசியா
Reading Time: 3 mins read
0
அகதிகள் அட்டையைக் காட்டி ‘பர்மிட்’ என ஏமாற்று வேலை: சிலாங்கூர் குடிநுழைவு துறையின் வலையில் சிக்கிய பெண்! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பின் (UNHCR) அடையாள அட்டையை மலேசியாவில் பணிபுரிவதற்கான முறையான ‘வேலை அனுமதிப் பத்திரம்’ என நினைத்து வேலை செய்துவந்த 28 வயது மியன்மார் பெண் உட்பட 197 வெளிநாட்டவர்கள் குடிநுழைவுத் துறையின் அதிரடிச் சோதனையில் கைது செய்யப்பட்டனர்.

இங்குள்ள பூலாவ் இண்டா பகுதியில் அமைந்துள்ள பேட்டரி தொழிற்சாலை ஒன்றில் சிலாங்கூர் மாநிலக் குடிநுழைவுத் துறை இன்று காலை 10.30 மணியளவில் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது இவர்கள் பிடிபட்டனர்.

பிடிபட்ட ‘டிங்-டிங்’ என்ற மியன்மார் பெண் கூறுகையில், “தோழி ஒருவரின் உதவியால் கடந்த ஒரு மாதமாகத்தான் இந்தப் பேட்டரி தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறேன். எனக்கு ஒரு நாளைக்கு RM80 சம்பளம் வழங்கப்படுகிறது என்றார்.

நான் தினமும் வேலை செய்வேன். விடுமுறை எடுத்தால் சம்பளம் பிடிக்கப்படும் என்பதால் தினமும் வேலைக்கு வருகிறேன். எனது வேலையே மோட்டார் சைக்கிள் பேட்டரி பாகங்களை ஒன்று சேர்ப்பதுதான். சம்பாதிக்கும் பணத்தில் பாதியை மியன்மாரில் உள்ள குடும்பத்திற்கு அனுப்பி வைக்கிறேன்,” எனக் கூறினார்.

மேலும், தான் கடந்த 10 ஆண்டுகளாக மலேசியாவில் வசித்து வருவதாகவும், இதற்கு முன் கோலாலம்பூரைச் சுற்றியுள்ள பல்வேறு கடைகளில் பணிபுரிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

UNHCR அகதிகள் அட்டை என்பது மலேசியாவில் சட்டப்பூர்வமாக வேலை செய்வதற்கான அனுமதியோ, வேலைவாய்ப்பு உரிமமோ அல்லது கடப்பிதழோ அல்ல என்பதை குடிநுழைவுத் துறை மீண்டும் நினைவூட்டியுள்ளது.

இன்றைய சோதனையில், செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாதது மற்றும் குடிநுழைவுச் சட்ட விதிகளுக்கு மாறாகப் பணிபுரிந்தது போன்ற பல்வேறு குற்றங்களுக்காக மொத்தம் 197 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.



Read More

Previous Post

100 டாலரை தொட்டு ஷாக் கொடுத்த கச்சா எண்ணெய்.. புலம்பும் மத்திய அரசு.. விரைவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு? | Brent Crude Crosses $100 as US-Iran Hostilities Escalate: Petrol and Diesel Price Hike Threatens India

Next Post

அச்சிடுவதற்காக மீண்டும் இலட்சக்கணக்கில் குவிந்துள்ள வாகன இலக்கத்தகடுகள்

Next Post
அச்சிடுவதற்காக மீண்டும் இலட்சக்கணக்கில் குவிந்துள்ள வாகன இலக்கத்தகடுகள்

அச்சிடுவதற்காக மீண்டும் இலட்சக்கணக்கில் குவிந்துள்ள வாகன இலக்கத்தகடுகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin