100 டாலரை தொட்டு ஷாக் கொடுத்த கச்சா எண்ணெய்.. புலம்பும் மத்திய அரசு.. விரைவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு?
அமெரிக்கா – ஈரான் மத்தியிலான போர் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இதேவேளையில், ஏமன் நாட்டில் இகுக்கும் ஈரான் ஆதரவு படைகளான ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் முக்கிய நகரங்கள், எரிபொருள் உற்பத்தி ஆலைகளை மீது குறிவைத்து டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
மறுபுறம் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் வெஸ்ட் பேங்க் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் உள்ள சட்டவிரோத இஸ்ரேலிய தொழிற்சாலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் அனைத்துப் பொருட்களின் இறக்குமதிக்கும் தடை விதித்துள்ளது. இதோடு அமெரிக்கா – கனடா மத்தியில் வரி விதிப்பு மூலம் வர்த்தக போர் துவங்கியுள்ளது.

இதற்கிடையில் மத்திய கிழக்கில் மொத்தமாக பதற்றமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கும் வேளையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று தடாலடியாக உயர்ந்துள்ளது.
சர்வதேச பியூச்சர்ஸ் சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 2.5% உயர்ந்து ஒரு பேரல் 100 டாலரை கடந்துள்ளது. அதேபோல், அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலை இன்றைய வர்த்தகத்தில் மட்டும் சுமார் 2% உயர்ந்து 95 டாலர் அருகில் சென்றுள்ளது.
கடந்த ஒரு வாரமாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருப்பக்கம் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது, மறுபக்கம் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டாலரை தொட்டு உள்ளது. ஆனால் பல மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி தொடர்கிறது.
ஏற்கனவே பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் விற்பனை செய்யும் எரிபொருளுக்கு கடுமையான இழப்பு ஏற்படுவதாக கூறி வருகிறது. தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் 5 ரூபாயும் டீசலுக்கு 23 ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
கடைசியாக பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஜூலை 23ஆம் தேதி 100 டாலரை கடந்திருந்தது, அதன் பின்பு அமெரிக்கா – ஈரான் மத்தியில் பேச்சுவார்த்தை, போர் நிறுத்தம் காரணமாக விலை 75 – 80 டாலர் வரையில் குறைந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக போர் பதற்றம் அதிகரித்த காரணத்தால் மீண்டும் 100 டாலரை எட்டியுள்ளது.

