YouTube-இல் கற்று கொண்ட சமையல் கலை.. மாதம் ரூ.25 லட்சம் வருமானம் ஈட்டும் இளைஞர்..!!
சொந்தமாக தொழில் தொடங்கி சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் வேலையை விடுத்து ரிஸ்க் எடுக்கும் நபர்கள் பலர் உண்டு. ஆரம்பத்தில் முறையான முதலீடோ அல்லது பெரிய பின்புலமோ இல்லாமல் சிறிய அளவில் தொடங்கப்படும் முயற்சிகள் கூட, கடின உழைப்பு மற்றும் சரியான திட்டமிடல் இருந்தால் மிகப்பெரிய வெற்றியை தரும் என்பதற்கு உதாரணமாக பலர் மாறியுள்ளனர்.
அபிஷேக் சாஹூ என்பவர் சொந்தமாக ஒரு சாண்ட்விச் கடை நடத்தி வருகிறார். இதற்கு விதை போட்டது யூடியூப். போபாலை சேர்ந்த இஅவர் முதலில் ஒரு கடை நடத்தி வந்துள்ளார். ஆனால் ஒரே ஆண்டில் அதனை மூடும் நிலை ஏற்பட்டது. இருந்தாலும் தான் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்று கொண்ட அவர், இரண்டாவதாக தொடங்கிய தொழிலில் வெற்றி பெற்றுள்ளார்.

முதலில் சிறு கடை நடத்தி அதில் நஷ்டம் அடைந்த அபிஷேக், ஒரு நாள் யூடியூபில் எப்படி சாண்ட்விச் செய்வது என்ற வீடியோவை பார்த்துள்ளார். அதுவரை சமையலில் பெரிய அளவிலான அனுபவம் இல்லை. இதனால், வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் சுவையான சாண்ட்விச்களை எப்படி தயாரிப்பது என்பதை யூடியூப் தளத்தில் கிடைக்கும் பல்வேறு சமையல் குறிப்பு வீடியோக்களை பார்த்து, தன் சொந்த முயற்சியிலேயே வித்தியாசமான மற்றும் சுவையான சாண்ட்விச் ரெசிபிகளை உருவாக்கினார்.
This is Abhishek Sahu.
15 years ago, he moved to Bhopal and started an internet café. It shut down within a year.
He then took a ₹30,000 loan and started a small sandwich cart after learning recipes on YouTube.
Today, Hari Har Sandwich sells:
⁰• 600+ sandwiches on weekdays… pic.twitter.com/mwjGaaChuU
— Pratham (@CapitalLens_) September 1, 2026 “>
தானாக கற்றறிந்த சமையல் முறைகளை கொண்டு அவர் தயாரித்த சாண்ட்விச்களுக்கு நண்பர்களிடம் வரவேற்பு கிடைத்ததால் உடனடியாக ஒரு வண்டி கடை போட்டு சாண்ட்விச் விற்க தொடங்கினார். 30,000 ரூபாய் கடனில் இந்த தொழிலை அவர் தொடங்கினார்.வாடிக்கையாளர்களுக்கு உயர் தரமான, சுகாதாரமான மற்றும் சுவையான உணவை குறைந்த விலையில் வழங்கினார். இதுவே இவரது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இவரது கடைக்கு நாளுக்கு நாள் வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்க தொடங்கியது.
கடின உழைப்பு, ருசி, குறைந்த விலை ஆகியவை இன்று அவரது வாழ்க்கையையே மாற்றிவிட்டன. சிறிய தள்ளுவண்டியாக தொடங்கிய இந்த தொழில், தற்போது மிகப்பெரிய அளவில் வளர்ந்து, மாதத்திற்கு சுமார் 25 லட்சம் வரை வருமானம் ஈட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதாம். வார நாட்களீல் 600க்கும் அதிகமான சாண்ட்விச்கள், வார இறுதி நாட்களில் 1000க்கும் அதிகமான சாண்ட்விச்களை விற்பனை செய்கிறார்.
போபாலில் Hari Har Sandwich கடையை தெரியாதவர்களே இல்லை என்ற அளவுக்கு வளர்ந்துள்ளார். பிரதாம் என்பவர் இவரது வெற்றி கதையை எக்ஸ் பக்கத்தில் பகிர அது வைரலாகி வருகிறது. பெரிய முதலீடு இருந்தால் மட்டுமே தொழிலில் வெற்றி பெற முடியும் என்ற பொதுவான எண்ணத்தை உடைத்து, சிறு முதலீட்டிலும் பெரிய தொழிலை உருவாக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார் இவர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

