Last Updated:
கடந்த சட்டமன்றத் தேர்தலில் 215 இடங்களை கைப்பற்றிய திரிணமுல் காங்கிரஸ் இந்த முறை 80 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன் பின்னணி என்ன என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
மேற்குவங்க வரலாற்றில் முதல்முறையாக பாஜக அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று பாஜக வரலாறு படைத்துள்ளது.
294 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட மேற்குவங்க சட்டப்பேரவைக்கு கடந்த 23 மற்றும் 29 ஆகிய இரண்டு தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஃபால்டா தொகுதியில் வாக்குப்பதிவில் நடைபெற்ற முறைகேடு காரணமாக அங்கு வரும் 21 ஆம் தேதி மறு தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால், 293 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 148 தொகுதிகளில் வெற்றி பெறக்கூடிய கட்சி ஆட்சி அமைக்கும் எனும் நிலையில், பாஜக 207 தொகுதிகளில் வென்று அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளது.
பாஜக தனது கோட்டையாக கருதும் வடக்கு மற்றும் தென் மேற்கு மாவட்டங்களில் அதிக இடங்களை கைப்பற்றியதுடன், திரிணமூல் கட்சியின் கோட்டையான கொல்கத்தா மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களிலும் கணிசமாக வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் மேற்கு வங்கத்தில் முதல் முறையாக பாஜக ஆட்சி அமைக்கிறது. மம்தா பானர்ஜியின் 15 ஆண்டு கால ஆட்சியை பாஜக முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.
மம்தா பானர்ஜி
கடந்த சட்டமன்றத் தேர்தலில் 215 இடங்களை கைப்பற்றிய திரிணமுல் காங்கிரஸ் இந்த முறை 80 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. திரிணமுல் காங்கிரஸ் தொடர்ந்து நான்காவது முறையாக ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், அக்கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தை 17 ஆண்டுகள் ஆண்ட காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும், 33 ஆண்டுகள் ஆட்சி செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றன. ஆம் ஜனதா உன்னயன் கட்சி இரண்டு தொகுதிகளிலும், அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி ஒரு இடத்திலும் வென்றன.
பவானிபூர் தொகுதியில் போட்டியிட்ட திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இத்தொகுதியில் சுவேந்து அதிகாரி 73,917 வாக்குகளும், மம்தா பானர்ஜி 58,812 வாக்குகளும் பெற்றனர்.
#WATCH | Howrah, West Bengal: TMC office allegedly vandalised in Dumurjala area.
Chaos erupted at the TMC office in Dumurjala area. Visuals show smashed windows, posters torn down, chairs broken, and party flag thrown on the road. pic.twitter.com/6HLbwaqQyO— ANI (@ANI) May 4, 2026
இதேபோன்று சுவேந்து அதிகாரி போட்டியிட்ட மற்றொரு தொகுதியான நந்திகிராமில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையொட்டி, தனது ஆதரவாளர்களுக்கு அவர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது, ஊழல் நிறைந்த, குடும்ப நலன் சார்ந்த திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு எந்த சித்தாந்தமும் கிடையாது என்று சுவேந்து அதிகாரி விமர்சித்தார்.
அதேநேரம் பாஜக 100 க்கும் மேற்பட்ட இடங்களில் மோசடி செய்து வென்றுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள மம்தா பானர்ஜி, தேர்தல் ஆணையத்தை பாஜகவின் ஆணையம் என்றும் விமர்சித்தார். பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பது உறுதியான நிலையில், அசன்சோல், ஹவுராவின் துமுர்ஜாலா பகுதிகளில் உள்ள திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகங்கள் சூறையாடப்பட்டன.
#WATCH | Asansol, West Bengal: TMC office allegedly vandalised in Asansol’s Godhuli area.
Unknown miscreants vandalised the TMC office. Visuals show the premises heavily damaged, with furniture, flags, posters and banners torn down. pic.twitter.com/eI1ystMlew— ANI (@ANI) May 4, 2026
அறுதிப் பெரும்பான்மையில் பாஜக வெற்றி பெற இருப்பதால், சுவேந்து அதிகாரி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பாஜக மூத்த தலைவரான திலீப் கோஷ், அக்னிமித்ரா பால், பாஜகவின் மாநில தலைவரான ஷமிக் பட்டாச்சார்யா ஆகியோரும் முதலமைச்சருக்கான போட்டியில் உள்ளனர்.
அறுதிப் பெரும்பான்மையோடு வரலாறு படைத்த பாஜக…ஆட்டம் கண்ட திரிணமுல் காங்! சறுக்கியதும் சாதித்ததும் எங்கே?


