Last Updated:
வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் சுமார் 59 ஆயிரம் கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய விண்வெளி முகாமின் ‘சென்டினல்-1’ செயற்கைக்கோள் எடுத்த படங்களை ஆய்வு செய்த ஒரிகான் மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் சுமார் 59 ஆயிரம் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.
நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகம் இருந்த மத்திய கடலோரப் பகுதிகள் மற்றும் தலைநகர் கராகசில் இருந்த கட்டடங்கள் உருகுலைந்து போயுள்ளன. வெறும் 39 விநாடி இடைவெளியில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டது தான் பிரம்மாண்ட கட்டடங்கள் இந்த அளவிற்கு சேதமடைய காரணம் என பொறியியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். முதல் நடுக்கத்தால் லேசான விரிசல்களுடன் ஆடிக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான கட்டடங்கள், நிலைபெறுவதற்குள் அடுத்த 39-ஆவது விநாடியில் இரண்டாவது நிலநடுக்கம் தாக்கியதாகவும், இதனை தாங்க முடியாமல், கட்டடங்கள் சீட்டுக் கட்டுப் போலச் சரிந்து விழுந்ததாகவும் பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கட்டட இடிபாடுகளிலிருந்து உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருவதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதுவரை சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் காணாமல் போயுள்ளனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,000-ஐக் கடந்துள்ளது.


