Last Updated:
இந்த உடல்கள் புதைக்கப்பட்ட இடங்களில் சிலுவைகள் வைக்கப்பட்டு, அனைத்திலும் பொதுவான இறப்பு தேதியாக நிலநடுக்கம் ஏற்பட்ட நாளான ஜூன் 24, 2026 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கத்தால் பலியான, அடையாளம் தெரியாத நபர்களின் உடல்கள் லா குவைரா (La Guaira) கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட காட்சி வெளியாகி சோகத்தை ஏற்படுத்தி உள்ளன.
கடந்த 24 ஆம் தேதி வெனிசுலாவில் ஏற்பட்ட இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் நாடு முழுவதும் 3,500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். கடந்த 125 ஆண்டுகளில் வெனிசுலா சந்தித்த மிக மோசமான பேரிடர் இதுவாகும். அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் கடலோரப் பகுதியான லா குவைரா மிகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்தது. இங்கு 150க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத சடலங்கள் மீட்கப்பட்டன.
அடையாள தெரியாத 150 உடல்களுக்கும், ஒரே இடத்தில் நல்லடக்கம்… சோகத்தால் நிறைந்த வெனிசுலா!

