Last Updated:
இன்ஸ்டாகிராமில் தீபிகாவை 8 கோடிக்கும் அதிகமானோர் பின் தொடரும் நிலையில், அவரது பதிவு தற்போது வைரலாகியுள்ளது.
வந்தாரா வன விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தை பிரதமர் மோடி பார்வையிட்ட நிலையில், அதனை நிர்வகித்து வரும் ஆனந்த் அம்பானி மற்றும் அவரது மனைவி ராதிகா மெர்ச்சென்டை முன்னணி நடிகை தீபிகா படுகோனோ பாராட்டியுள்ளார். பிரதமர் மோடி வந்தாராவை பார்வையிட்டதை குறிப்பிட்டு இருவரையும் வாழ்த்தியுள்ளார் தீபிகா படுகோனே.
வன நட்சத்திரம் என்று அர்த்தம் கொண்ட வந்தாரா என்ற இந்த விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை இணைந்து தொடங்கியுள்ளது. இதனை ரிலையன்ஸ் குழுமத்தின் சேர்மன் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி நிர்வகித்து வருகிறார். குஜராத் மாநிலம் ஜாம் நகரில் 3000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் இந்த வந்தாரா பரந்து விரிந்து காணப்படுகிறது. இதற்குள் வன விலங்குகளுக்கான மருத்துவமனைகள், உடல் நல மையம் உள்ளிட்ட ஏராளமான அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
வந்தாராவின் சேவைகளை அங்கீகரித்துள்ள மத்திய அரசு அதற்கு பிராணி மித்ரா என்ற உயரிய விருதை வழங்கி கவுரவித்துள்ளது. வந்தாரா விலங்குகள் மீட்பு மறுவாழ்வு மையத்தில் 1 லட்சம் சதுர அடி அளவில் மருத்துவமனையும், ஆய்வு மையமும் உள்ளன. இங்கு ஐசியு, MRI, CT Scan, X-Ray, அல்ட்ரா சண்ட், எண்டோஸ்கோப்பி, டென்டல் ஸ்கேலர் உள்ளிட்ட நவீன மருத்துவ வசதிகள் உள்ளன.
வந்தாராவை கடந்த ஞாயிறு அன்று பார்வையிட்ட பிரதமர் மோடி, அதுகுறித்த தனது அனுபவத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் சுமார் 7 நிமிடங்கள் ஓடும் வந்தாரா குறித்த வீடியோவையும் பிரதமர் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், பிரதமரின் பதிவுகளை ரீ ட்வீட் செய்து பிரபலங்கள் பலரும் ஆனந்த் அம்பானியை பாராட்டி வருகின்றனர்.
இதுபற்றி சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் பதிவில், வந்தாரா குறித்த அனுபவங்களை பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். அவர் உணர்ந்ததைத் தான் நானும் வந்தாரா சென்றிருந்தபோது உணர்ந்தேன். வன விலங்குகளை பாதுகாத்து பராமரிக்க வேண்டும் என்பதற்காக ஆனந்த் அம்பானி அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறார். அவரது முயற்சிகள் பாராட்டத்தக்கது. என்று தெரிவித்திருந்தார்.

இதேபோன்று ஷாரூக்கான் தனது எக்ஸ் பதிவில், வந்தாராவில் ஆனந்த் அம்பானி மேற்கொண்டு வரும் அறப்பணிகளை தொடர வேண்டும் என்று பாராட்டியிருந்தார். இந்நிலையில் இந்தியாவின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே, வந்தாராவை நிர்வகித்து வரும் ஆனந்த் அம்பானி மற்றும் அவரது மனைவி ராதிகா மெர்ச்சென்டை வாழ்த்தி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் தீபிகாவை 8 கோடிக்கும் அதிகமானோர் பின் தொடரும் நிலையில், அவரது பதிவு தற்போது வைரலாகியுள்ளது.
March 05, 2025 8:42 PM IST
‘Vantara : வாழ்வில் என்றைக்கும் மறக்க முடியாத தருணம்’ – ஆனந்த் அம்பானி – ராதிகாவுக்கு தீபிகா படுகோனே வாழ்த்து


