தொடர்ந்து ட்ரூத் என்ற தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்ட டிரம்ப், “ஈரான் உடனான அமெரிக்காவின் பேச்சுவார்த்தை 100% நிறைவடையும் வரை, ஈரான் மீதான அமெரிக்காவின் கட்டுப்பாடுகள் இப்போதைக்கு முழுமையாக நீங்காது” எனக் கூறி, ஈரானிற்கு ஷாக் கொடுத்தார். டிரம்ப்பின் இந்தப் பதிவிற்கு காரணம், டிரம்ப் ஈரானை முழுமையாக நம்பத் தயாராக இல்லை என்பதே. அதனாலேயே, “ஈரான் தனது அணுசக்தி தொடர்பான வாக்குறுதிகளை (குறிப்பாக யுரேனியத்தை அமெரிக்காவிடம் ஒப்படைப்பது போன்றவை) முழுமையாக நிறைவேற்றினால் மட்டுமே, அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையைத் தளர்த்தும்” என ஈரான் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார் டிரம்ப்.

