இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அதன் இரண்டு பை-மன்த்லி மானிட்டரி பாலிசியில், UPI ட்ரான்ஸாக்ஷன்களுக்கான லிமிட்டை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. மானிட்டரி பாலிசியை ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்ததை அடுத்து வரி செலுத்துவதற்கான UPI ட்ரான்ஸாக்ஷன் லிமிட்டை அதிகரித்துள்ளது.
UPI கட்டணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. டீ குடிப்பது, வெளியே சாப்பிடுவது, ஷாப்பிங் செய்வது போன்றவற்றிற்காக பணம் செலுத்துவதற்கு பலரும் UPI பயன்படுத்துகின்றனர். இன்றைய காலக்கட்டத்தில் செல்லும் இடத்திற்கெல்லாம் பணத்தை கையில் கொண்டு செல்வது அரிதான விஷயமாகும். இந்நிலையில் RBI கொண்டு வந்த UPI, மக்களுக்கு வரப்பிரசாதமாக செயல்பட்டு வருகிறது. இப்போது இது எல்லா இடங்களிலும் பரவி வருகிறது. இதை மக்கள் பயன்படுத்தும் வகையில், RBI ஆனது UPI சேவைகளிலும் புதிய வசதிகளை கொண்டு வருகிறது.
நாட்டின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி சமீபத்தில் மானிட்டரி பாலிசியில் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், பண்டிகைக் காலத்தில் UPIயின் ட்ரான்ஸாக்ஷன் லிமிட்டை அதிகரித்து நாட்டின் சாமானிய மக்களுக்கு சிறப்புப் பரிசை வழங்கியுள்ளார். சிறிய பரிவர்த்தனைகளைச் செய்யும் நுகர்வோர் இந்த முடிவின் மூலம் அதிகப் பயனடைவார்கள். இது தவிர UPI லைட் மற்றும் UPI 123பே பற்றிய ஒரு நல்ல செய்தி உள்ளது. UPI இல் மூன்று முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, அவை சாமானியர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.
இதையும் படிங்க : FD-யில் 9.5% வட்டி… மொபிக்விக் அறிமுகப்படுத்திய அதிரடி திட்டம்!
மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், ஐபிஓக்கள் மற்றும் ரிசர்வ் வங்கியின் ரீடெய்ல் டைரக்ட் ஸ்கீம் உள்ளிட்ட பிற ட்ரான்ஸாக்ஷன்களுக்கும் UPI லிமிட் பொருந்தும். பியர்-டு-பியர் பேமெண்ட்டுகளுக்கான ஸ்டாண்டர்டு UPI ட்ரான்ஸாக்ஷன் லிமிட்டை ரூ.1 லட்சம் வரை அதிகரித்துள்ளது. இருப்பினும், தனிப்பட்ட வங்கிகள் தங்களின் UPI லிமிட்களை செட் செய்து கொள்ளலாம். கேப்பிடல் மார்க்கெட், காலெக்ஷன்ஸ், இன்சூரன்ஸ் மற்றும் ஃபாரின் இன்வர்ட் ரெமிட்டன்சஸ் தொடர்பான UPI ட்ரான்ஸாக்ஷன் லிமிட்டை ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம் வரை அதிகரித்துள்ளது.
UPI ட்ரான்ஸாக்ஷன் லிமிட்:
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கடந்த வாரம் UPI லைட் மற்றும் UPI 123 பே-க்கான இரண்டு ட்ரான்ஸாக்ஷன் லிமிட்டை உயர்த்தியுள்ளது. அதாவது, UPI 123 பே-க்கான ஒவ்வொரு ட்ரான்ஸாக்ஷன் லிமிட்டையும் ரூ.5000 இல் இருந்து ரூ.10000 ஆக அதிகரித்துள்ளது. கூடுதலாக UPI லைட் வாலெட் லிமிட்டையும் ரூ.2000 இல் இருந்து ரூ.5000 ஆக அதிகரித்துள்ளது. மேலும் UPI லைட்-க்கான ட்ரான்ஸாக்ஷன் லிமிட் ரூ.500 இல் இருந்து ரூ.1,000 ஆக அதிகரித்துள்ளது.
2 UPI ட்ரான்ஸாக்ஷன் லிமிட்:
1. UPI 123 பே-க்கான ஒவ்வொரு ட்ரான்ஸாக்ஷன் லிமிட்டும் ரூ.5,000 இல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டது.
2. UPI லைட் வாலட் லிமிட்டை ரூ.2,000 இல் இருந்து ரூ.5,000 ஆகவும், UPI லைட்-க்கான ட்ரான்ஸாக்ஷன் லிமிட் ரூ.500 இல் இருந்து ரூ.1,000 ஆகவும் உயர்த்தப்பட்டது.
.
&w=750&resize=750,375&ssl=1)
