• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பாஜகவில் லாட்டரி மார்ட்டினின் மகன்! புதுச்சேரி அரசியலில் கால் பதிக்கிறார்?

GenevaTimes by GenevaTimes
November 17, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
பாஜகவில் லாட்டரி மார்ட்டினின் மகன்! புதுச்சேரி அரசியலில் கால் பதிக்கிறார்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுச்சேரியில் பாஜக சட்டமன்ற உறுப்பினராக இருக்கக் கூடியவர் ஜான் குமார். இவரது மகன் ரிச்சர்ட் ஜான் குமார். எம்எல்ஏ ஜான் குமார், ஆரம்பக் கட்டத்தில் லாட்டரி விற்பனை செய்து வந்தார். அவரது குருவாக லாட்டர் தொழிலதிபர் மார்ட்டின் உள்ளார்.

இன்று புதுச்சேரி காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதியில் கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள், பாஜக ஆதரவு தரும் சட்டமன்ற உறுப்பினர்கள் என எட்டு பேர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில், லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி, பாராட்டினார்.

விளம்பரம்

நிகழ்ச்சியில் பங்கேற்ற ரிச்சர்ட் எம்எல்ஏ பேசும்போது, “காமராஜர் நகர் தொகுதிக்கு ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வந்துள்ளார். தனது தந்தையை விட பல மடங்கு செய்வார். திறமையானவர். எல்லா பலமும் உடையவர்” என கூறினார்.

லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகனின் அரசியல் வருகையை குறித்து ஜான் குமாரிடம் கேட்டதற்கு, “நன்றாக படித்தவர். பல மொழி தெரிந்தவர். உலக நாடுகளை சுற்றி, அங்கிருப்பதை புதுச்சேரியில் செயல்படுத்த திட்டமிட்டு உள்ளார்” என்று கூறினார்.

மும்பையில் வசித்து வரும் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், புதுச்சேரி அரசியலில் குதிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், “புதுச்சேரி அரசியலில் களம் காண இருப்பதாக சொல்லப்படுகிறதே?” என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர், “இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றேன். அரசியலில் களம் காண்பது தொடர்பாக நேரம் வரும்போது தெரிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

விளம்பரம்

இதையும் படியுங்கள் :
“எதுவுமே உண்மை கிடையாது” – கஸ்தூரி வீடியோவை வெளியிட்ட அர்ஜுன் சம்பத்

தமிழகத்தில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடுகளில் சோதனை நடைபெற்று வந்த நிலையில், அவரது மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரியில் பாஜக காமராஜர் நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமாரின் நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பதும், நேரம் வரும்போது அரசியல் வருகை குறித்து அறிவிப்பேன் என்று தெரிவித்திருப்பதும் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.

புதுச்சேரியில் 2026 ஆம் ஆண்டு பாஜக முப்பது தொகுதியில் தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளது. அதற்கு பலமாக லாட்டரி அதிபர் மார்ட்டின் மகனை களத்தில் இறக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

விளம்பரம்

.

Read More

Previous Post

Tamilmirror Online || IMF இன் மூன்றாவது குழு இலங்கை விஜயம்

Next Post

UPI பயனர்கள் கவனத்திற்கு.. ட்ரான்ஸாக்ஷன் லிமிட் அதிகரிப்பு.. எவ்வளவு தெரியுமா?

Next Post
UPI பயனர்கள் கவனத்திற்கு.. ட்ரான்ஸாக்ஷன் லிமிட் அதிகரிப்பு.. எவ்வளவு தெரியுமா?

UPI பயனர்கள் கவனத்திற்கு.. ட்ரான்ஸாக்ஷன் லிமிட் அதிகரிப்பு.. எவ்வளவு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin