• Login
Sunday, October 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

UPI-இல் பணம் அனுப்புவதில் சிக்கலா? பேங்க் உங்களுக்கு இழப்பீடு தரும் தெரியுமா? | UPI Payment Failed but Money Debited? Know When Banks Must Pay ₹100 a Day

GenevaTimes by GenevaTimes
October 25, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
UPI-இல் பணம் அனுப்புவதில் சிக்கலா? பேங்க் உங்களுக்கு இழப்பீடு தரும் தெரியுமா? | UPI Payment Failed but Money Debited? Know When Banks Must Pay ₹100 a Day
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


UPI-இல் பணம் அனுப்புவதில் சிக்கலா? பேங்க் உங்களுக்கு இழப்பீடு தரும் தெரியுமா?

இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நிமிடமும் யூபிஐ மூலம் பணப் பரிமாற்றங்களை செய்கின்றனர். பணம் அனுப்புவது, பணம் பெறுவது என எங்கு பார்த்தாலும் ஜிபே, போன் பே, பேடிஎம் போன்ற யூபிஐ செயலிகளின் மெசேஜ் சத்தங்களை நாம் கேட்க முடிகிறது.

யூபிஐ-இல் பணம் அனுப்பும்போது சில சமயம் பரிமாற்றம் தோல்வியடைந்து, கணக்கிலிருந்து பணம் டெபிட் ஆகிவிடும், ஆனால் பணம் பெறுபவருக்கு சென்றடையாது. இது போன்ற நேரங்களில் நாம் மிகுந்த மன உளைச்சலுக்கும் குழப்பத்திற்கும் ஆளாகிறோம். இனி அந்த பிரச்சினை இல்லை, இந்திய ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அந்த பணம் உங்களின் கணக்கிற்கே திரும்ப வராவிட்டால் , வங்கி உங்களுக்கு தினசரி 100 ரூபாய் என இழப்பீடு வழங்க வேண்டும்.

UPI-இல் பணம் அனுப்புவதில் சிக்கலா? பேங்க் உங்களுக்கு இழப்பீடு தரும் தெரியுமா?

யூபிஐ பரிமாற்றம் என்பது ஒரே நேரத்தில் பல அமைப்புகள் மூலம் செயல்படுகிறது. பணம் அனுப்பும் நபரின் வங்கி (Sender’s Bank), பெறும் வங்கி (Beneficiary’s Bank), என்பிசிஐ (NPCI) பரிமாற்ற நெட்வொர்க் மற்றும் குறிப்பிட்ட பேமெண்ட் செயலி (Google Pay, PhonePe, Paytm போன்றவை). இந்த சங்கிலியில் எங்கு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டாலும், பரிமாற்றம் பாதியிலேயே நின்றுவிடும்.

பொதுவாக இவ்வாறு பணப்பரிமாற்றம் தோல்வி அடைந்தால் வங்கிகள் உடனே அந்த பணத்தை உங்களின் கணக்கில் கிரெடிட் செய்துவிட வேண்டும். அவ்வாறு உடனே பணம் வரவில்லை என்றால் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதே ஆர்பிஐ சொல்லும் விதி.

நீங்கள் நண்பர் அல்லது உறவினருக்கு யூபிஐ மூலம் பணம் அனுப்பும்போது, உங்கள் கணக்கில் பணம் குறைந்துவிட்டது, ஆனால் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்றால், T+1 நாள் ,அதாவது பரிமாற்றம் நடந்த நாளில் இருந்து அடுத்த நாளுக்குள் வங்கி அந்த பணத்தை வாடிக்கையாளருக்கு திருப்பியளிக்க வேண்டும்.ஒருவேளை இந்த காலக்கெடுவை தாண்டி தாமதமானால், ஒவ்வொரு தாமத நாளுக்கும் 100 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

நீங்கள் ஒரு கடைக்காரருக்கு யூபிஐ மூலம் பணம் செலுத்தி, உங்கள் கணக்கில் பணம் பிடிபட்டு, ஆனால் கடை கணக்கிற்கு பணம் உறுதிப்படுத்தப்படாமல் போனால், T+5 நாட்களுக்குள் பணம் திருப்பியளிக்கப்பட வேண்டும். T+5 நாட்களுக்கு மேல் தாமதமானால், ஒவ்வொரு நாளுக்கும் 100 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

இந்த இழப்பீட்டு தொகைக்கு வாடிக்கையாளர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை, அந்த காலக்கெடு மீறப்படும் பட்சத்தில் வங்கிகளால் தானாகவே பணத்தை உங்கள் கணக்கில் வரவு வைக்க வேண்டும்.

ஒருவேளை பணம் திரும்ப வரவில்லை என்றால் நீங்கள் பயன்படுத்திய யூபிஐ செயலியில் பரிமாற்றம் வெற்றி அடைந்துள்ளதா, தோல்வியடைந்துள்ளதா அல்லது நிலுவையில் உள்ளதா என்பதை பார்க்கவும். பின்னர், Transaction Reference Number/UPI ID, தேதி, நேரம், உள்ளிட்ட தகவல்களை சேமித்து வைத்து, அந்த செயலியின் ‘Help’ அல்லது ‘Raise a Dispute’ ஆப்ஷனை பயன்படுத்தி உடனடியாக புகாரை பதிவு செய்ய வேண்டும்.

இதில் தீர்வு கிடைக்கவில்லை என்றாலும், வங்கி உரிய பதிலளிக்கவில்லை என்றாலும் அல்லது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படவில்லை என்றாலும், ரிசர்வ் வங்கியின் Complaint Management System மற்றும் Integrated Ombudsman தளம் மூலம் புகாரளிக்கலாம்.

Share This Article

English summary

UPI Payment Failed but Money Debited? Know When Banks Must Pay ₹100 a Day

UPI-இல் பணம் அனுப்புவதில் சிக்கலா? பேங்க் உங்களுக்கு இழப்பீடு தரும் தெரியுமா? / If a UPI payment fails but money is deducted from your account, RBI rules set deadlines for reversing the transaction. For transfers where the beneficiary is not credited, the reversal deadline is T+1 day.

Story first published: Sunday, October 25, 2026, 11:27 [IST]

Other articles published on Oct 25, 2026

Read More

Previous Post

வீதிகளில் இறங்கிய சூப்பர் ஹீரோக்கள்.. ஸ்பைடர்மேன், சூப்பர்மேன் போராட்டத்திற்கு ஆதரவு! | France Protests: Black Panther, Captain America and Spider-Man Join Demonstrators across Europe

Next Post

மூத்த பத்திரிகையாளர் பி.ஆர்.ராஜன் காலமானார் – Malaysiakini

Next Post

மூத்த பத்திரிகையாளர் பி.ஆர்.ராஜன் காலமானார் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin