• Login
Sunday, October 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வீதிகளில் இறங்கிய சூப்பர் ஹீரோக்கள்.. ஸ்பைடர்மேன், சூப்பர்மேன் போராட்டத்திற்கு ஆதரவு! | France Protests: Black Panther, Captain America and Spider-Man Join Demonstrators across Europe

GenevaTimes by GenevaTimes
October 25, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
வீதிகளில் இறங்கிய சூப்பர் ஹீரோக்கள்.. ஸ்பைடர்மேன், சூப்பர்மேன் போராட்டத்திற்கு ஆதரவு! | France Protests: Black Panther, Captain America and Spider-Man Join Demonstrators across Europe
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Vigneshkumar

Time
Published: Sunday, October 25, 2026, 11:34 [IST]

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், போராட்டக் களத்தில் சூப்பர் ஹீரோக்களின் வேடமணிந்து மக்கள் பங்கேற்பது கவனம் ஈர்த்துள்ளது. பிளாக் பாந்தர், கேப்டன் அமெரிக்கா, ஸ்பைடர்மேன், சூப்பர்மேன், டெட்பூல் என பல்வேறு கதாபாத்திரங்களின் காஸ்ட்யூம் அணிந்து மக்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர்.

பிரான்ஸில் அதிகரிக்கும் வாழ்க்கை செலவுகள், எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் அங்கு நாடு முழுக்க போராட்டங்கள் வெடித்துள்ளன. போராட்டங்கள் அமைதியாகவே நடந்தாலும் கூட சில இடங்களில் போராட்டங்கள் வன்முறையாக மாறின. கண்ணீர் புகை குண்டுகள், போலீஸ் தாக்குதல் என நிலைமை மோசமாகி வருகிறது.

France Protests Europe

பிரான்ஸ் போராட்டம்

கடைகள் சூறையாடப்பட்டதுடன், வாகனங்கள் மற்றும் வரலாற்று கட்டிடங்களுக்கும் தீ வைக்கப்பட்டன. இதுவரை 1,200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் கூட்டத்தை கட்டுப்படுத்த முயலும் சூழலில், வித்தியாசமான போராட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

பாரிஸில் நடைபெற்ற போராட்டத்தின்போது, பிளாக் பாந்தர் மற்றும் கேப்டன் அமெரிக்கா வேடமணிந்த இருவர் களத்தில் மக்களுடன் மக்களாக இறங்கினர். அவர்களை சுற்றி நின்ற போராட்டக்காரர்கள் வீடியோக்களை எடுத்தனர். பின்னர் அந்த இருவரும் போராட்டக்காரர்களுடன் இணைந்து முழக்கங்களை எழுப்பினர்.

சூப்பர்ஹீரோக்கள்

மார்வெல் திரைப்படங்களில் அவெஞ்சர்ஸ் குழுவினர் ஒன்றிணைவதை போல, பிரான்ஸ் வீதிகளில் சூப்பர் ஹீரோக்கள் ஒன்றுகூடியிருப்பது போன்ற காட்சிகள் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளன. இதற்கு முன்பும் நெப்போலியன் போனபார்ட் மற்றும் பேட்மேன் வேடமணிந்தவர்கள் போராட்டங்களில் பங்கேற்ற வீடியோக்கள் டிரெண்டாகி இருந்தன.

போலீஸ் நடவடிக்கையில் இருந்து போராட்டக்காரர்கள் தங்களை பாதுகாத்து கொள்ளவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். பலர் மாஸ்க், பாதுகாப்பு கண்ணாடி அணிந்துள்ளனர். பெரும்பாலானோர் ஹெல்மெட் அணிந்திருப்பதையும் வீடியோக்களில் காண முடிகிறது.

கைது

பிரான்ஸின் பல்வேறு நகரங்களில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் கல்விக்கான நிதி குறைக்கப்படுவது உள்ளிட்ட பிரச்சினைகளைக் கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் சுமார் 4.10 லட்சம் பேர் போராட்டங்களில் பங்கேற்றதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது. இதில் பாரிஸில் மட்டும் சுமார் 1.10 லட்சம் பேர் திரண்டதாக கூறப்படுகிறது. வன்முறை சம்பவங்கள் தொடர்பாக சுமார் 1,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போராட்டங்களை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பாதுகாப்பு ப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பாரிஸில் போலீசார் தடியடி நடத்தி, நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். இது தொடர்பாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனெஸ், “சில நகரங்களில் பேரணிகள் அமைதியாக நடந்துள்ளன. ஆனால், சில இடங்களில் தீவிர இடதுசாரி குழுக்கள் போராட்டத்தில் புகுந்து, போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். மேலும், கொள்ளை, தீவைப்பு மற்றும் வன்முறை சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதில் போலீசாருக்குச் சிரமம் ஏற்பட்டது” என்றார்.

நிலைமை மோசம்

இதற்கிடையே உலோக குண்டுகள், பட்டாசுகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை போலீசார் கைப்பற்றியதாகவும் நுனெஸ் தெரிவித்துள்ளார். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போராட்டங்களுக்கு தடை விதித்து அதிபர் மேக்ரான் உத்தரவிட்டிருந்தார். இருப்பினும், அந்த தடை உத்தரவை நீதிமன்றம் அதே நாளில் ரத்து செய்ததும் நிலைமையை மோசமாக்கியது. பிரான்ஸ் மட்டுமின்றி வாழ்க்கை செலவு தொடர்பான போராட்டங்கள் இத்தாலி, அல்பேனியா, ஸ்பெயின், போர்ச்சுகல் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்து வருகிறது.

English summary

Superhero costumes worn by protesters in France have caught attention as demonstrations over rising living costs and fuel prices intensify(பிரான்ஸ் நாட்டில் தீவிரமடையும் போராட்டம்): France Protests latest news in tamil.

Read More

Previous Post

வங்காள விரிகுடாவில் உருவாகும் கடும் சூறாவளி: இலங்கை மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை – கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்! – Sri Lanka Tamil News

Next Post

UPI-இல் பணம் அனுப்புவதில் சிக்கலா? பேங்க் உங்களுக்கு இழப்பீடு தரும் தெரியுமா? | UPI Payment Failed but Money Debited? Know When Banks Must Pay ₹100 a Day

Next Post
UPI-இல் பணம் அனுப்புவதில் சிக்கலா? பேங்க் உங்களுக்கு இழப்பீடு தரும் தெரியுமா? | UPI Payment Failed but Money Debited? Know When Banks Must Pay ₹100 a Day

UPI-இல் பணம் அனுப்புவதில் சிக்கலா? பேங்க் உங்களுக்கு இழப்பீடு தரும் தெரியுமா? | UPI Payment Failed but Money Debited? Know When Banks Must Pay ₹100 a Day

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin