Last Updated:
உலகின் மிகத் தீவிரமான பயங்கரவாதியை கொன்று விட்டதாகவும், இதன்மூலம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் உலகளாவிய நடவடிக்கைகள் பெருமளவு குறைந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இரண்டாவது நிலை கமாண்டர் அபு-பிலால் அல்-மினுகி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள் மீது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த தீவிரவாத அச்சுறுத்தலை முறியடிக்க நைஜீரிய அரசு போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டி வந்த அமெரிக்கா, நைஜீரியா வீரர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக நூற்றுக்கணக்கான வீரர்களை அனுப்பி வைத்தது. மேலும் நைஜீரியாவை தளமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இரண்டாவது நிலை கமாண்டர் அபு-பிலால் அல்-மினுகியை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்கா அறிவித்தது.
இந்நிலையில், அமெரிக்கப் படைகளும், நைஜீரிய ஆயுதப் படைகளும் இணைந்து நடத்திய தாக்குதலில் அபு-பிலால் அல்-மினுகி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்ரூத் சமூகவலைதளத்தில் பதிவிடட்டுள்ள அவர், உலகின் மிகத் தீவிரமான பயங்கரவாதியை கொன்று விட்டதாகவும், இதன்மூலம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் உலகளாவிய நடவடிக்கைகள் பெருமளவு குறைந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.


