வில்கமுவ, ஹெட்டிபொல பகுதியில் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதலில் சிக்கி 56 வயதுடைய தந்தை மற்றும் அவரது 25 வயதுடைய மகள் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்: தந்தை தனது மகளை அவரின் வேலைத்தளத்தில் விடுவதற்காக துவிச்சக்கர வண்டியில் அழைத்துச் சென்றுகொண்டிருந்தபோதே, எதிர்பாராத விதமாக இந்தக் காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
யானையின் தாக்குதலினால் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இவர்களின் சடலங்கள் தற்போது மேலதிக விசாரணைகளுக்காக வில்கமுவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.


