இந்த சலுகை அனைத்து ஊழியர்களுக்கும் கொடுக்கப்படவில்லை. இந்த அறிவிப்பு சில முக்கிய துறைகளுக்கு அறிவிக்கப்படவில்லை.
ட்ரம்ப் அரசின் இந்த அதிரடி முடிவுக்கு, ‘அரசு செலவினங்களை குறைப்பது’ முக்கிய நோக்கம் என்று கூறப்படுகிறது.

நண்பர் வழியில்…
இந்த அறிவிப்பு சில ஆண்டுகளுக்கு முன்பும் அமெரிக்காவில் ஒலித்தது. ஆனால், அது ட்ரம்பிடம் இருந்து அல்ல…அவரது நண்பர் எலான் மஸ்கிடம் இருந்து.
தான் ட்விட்டரை வாங்கிய புதிதில் அதன் ஊழியர்களுக்கு, “பணியில் இருந்து விலகலாம் அல்லது கடுமையான பணி சூழலில் வேலை பார்க்கலாம்” என்ற இரண்டு ஆப்ஷன்களை தந்தார் எலான் மஸ்க். இதே ரூட்டை தான் தற்போது ட்ரம்பும் பிடித்துள்ளார். ட்ரம்ப் அரசின் இந்த முடிவுக்கு பின்னால் எலான் மஸ்க் இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.
ஒருவேளை இப்போது பணியில் இருந்து விலகாவிட்டால், எலான் மஸ்க் ட்விட்டர் ஊழியர்கள் சொன்ன அதே பாணியை ட்ரம்ப் அரசில் பணிபுரியும் ஊழியர்கள் சந்திக்கலாம்.

