2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியான அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை ஏற்றுகொள்ள முடியாத டோனல்ட் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
இதற்கு அவர் பேச்சுகளும் வலைத்தளப்பதிவுகளுமே காரணம் எனக் கருதிய சமூக ஊடகத் தளங்களான Facebook, முன்பு twitter என அழைக்கப்பட்ட ‘X’ ஆகியவை டிரம்ப்பின் கணக்குகளைத் தற்காலிகமாக முடக்கின.
இதை எதிர்த்து 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம், டிரம்ப் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கைச் சுமூகமாகத் தீர்க்க முடிவுசெய்த Facebook உரிமையாளரான ‘META’ நிறுவனம் அவருக்கு சுமார் சுமார் US$25 மில்லியன் வழங்க ஒப்புக்கொண்டதாக ஜனவரி 29ஆம் தேதி தெரிவித்தது.
இந்தச் சமரசத் தொகையில், 22 மில்லியன் அமெரிக்க டாலர் டிரம்ப்பின் அதிபர் நூலகத்திற்கான நிதியாகவும் மீதமுள்ளவை வழக்கில் உள்ள பிறதி வாதிகளுக்கும் சட்ட ஆலோசனைப் பெற்றதற்கான கட்டணமாகவும் வழங்கப்படும் எனக் கூறப்பட்டது.
சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மத்திய நீதிமன்றத்தில் சமரசம் தொடர்பான அறிக்கை ஒன்றை META நிறுவனம் தாக்கல் செய்தது.
The post டிரம்ப்பின் கணக்குகள் முடக்கம்; சமரசத் தொகையாக $33.7 மில்லியன் வழங்கும் ‘META’ appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

