TCS, இன்போசிஸ், HCL கொடுக்கும் வார்னிங்.. இனி வேலையே இருக்காது..!
இந்திய ஐடி சேவை நிறுவனங்களில் ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாட்டுக் காரணமாக எப்போதும் இல்லாத மிகப்பெரிய மாற்றம் நடந்து வருகிறது. இந்தியாவில் அதிக சம்பளம் கொண்ட வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் முன்னோடியாக இருக்கும் ஐடி சேவைத் துறையில் ஊழியர்கள் வெளியேற்ற எண்ணிக்கையை விடப் புதிதாகச் சேர்க்கப்படும் ஊழியர்கள் எண்ணிக்கையே எப்போதும் அதிகமாக இருக்கும்.
தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது, டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், டெக் மஹிந்திரா, விப்ரோ, LTIMindtree ஆகிய 6 நிறுவனத்தில் இந்த ஆண்டு மட்டும் மொத்தம் 92,000 ஊழியர்கள் வெளியேறியுள்ளனர். இது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் அட்ரிஷன் விகிதம் 11 -15 சதவீதம் அளவில் தான் உள்ளது.

ஆனால் புதிதாகச் சேர்க்கப்படும் ஊழியர்கள் எண்ணிக்கை இக்காலகட்டத்தில் 68,000 ஆகக் குறைந்துள்ளது. இதன் மூலம் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் சுமார் 24,422 பேர் குறைந்துள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து அதிக ஊழியர்களைச் சேர்த்து வந்த ஐடி நிறுவனங்கள் இந்த ஆண்டு ஏஐ உதவி இருக்கும் காரணத்தால், புதிதாகச் சேர்க்கப்படும் ஊழியர்களை நிறுத்திவிட்டு, வெளியேறும் ஊழியர்களின் பொறுப்புகளை தற்போது பணியில் இருக்கும் ஊழியர்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
இதன் மூலம் கடந்த 12 மாதத்தில் அக்டோபர் 2025 முதல் அக்டோபர் 2026 வரையிலான காலகட்டத்தில் இந்த டாப் 6 ஐடி சேவை நிறுவனத்தில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை என்பது 8,22,144ல் இருந்து 3 சதவீதம் குறைந்து 7,97,722 ஆக குறைந்துள்ளது.
பொதுவாக ஐடி சேவைத் துறையில் 2 பிரிவுகள் இருக்கும் ஐடி ஃபன்ஷன்ஸ் மற்றும் இன்ஜினியரிங் ஃபன்ஷன்ஸ். ஐடி ஃபன்ஷன்ஸ் பிரிவில் பெரும்பாலும் மெயின்டனென்ஸ், சப்போர்ட்டிங் பணிகளைச் செய்யும், இன்ஜினியரிங் பிரிவு சாப்ட்வேர் டெவலப்மெண்ட், அப்பிளிகேஷன் பில்டிங் பணிகளை செய்யும்.
தொழில்நுட்பம், திட்டம், வாடிக்கையாளர்கள் பொருத்து இரு பிரிவுகளும் பல நேரத்தில் இணைந்து பணியாற்றும். ஆனால் ஏஐ தொழில்நுட்பத்தை தற்போது ஐடி ஃபன்ஸ்ஷன்ஸ் பிரிவில் அதிகம் பயன்படுத்தி ஆட்டோமேஷன் செய்யப்படும் காரணத்தால் இப்பிரிவில் இருக்கும் ஊழியர்கள் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது.
மேலும் ஐடி ஊழியர்கள் எண்ணிக்கை குறையப் பல முக்கியமான காரணங்கள் உள்ளது, ஊழியர்கள் திறன் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்வதில் துவங்கி தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட மாற்றம், புதிய தொழில்நுட்பத்தின் வருகை, ஏஐ பயன்பாடு அதிகரிப்பு ஆகிய அனைத்தும் சேர்ந்து தான் புதிய ஊழியர்களை பணியில் இருந்து சேர்ப்பதை நிறுத்தும் முடிவுக்குத் தள்ளியது.
இதனால் படித்து முடித்து வெளியே வரும் பிரஷ்ஷர்களுக்கு ஐடி சேவைத் துறையில் பணியில் சேர்வதற்கான வாய்ப்பு என்பது குறைந்துள்ளது.

