
புதன்கிழமை (16) அன்று இயக்கப்படவிருந்த இரவுத் தபாலி ரயில் சேவைகள் 6 உம் மற்றொரு ரயில் சேவையும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரை இயக்கப்படும் இரவுத் தபாலிரயில்களும்; காங்கேசன்துறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி இயக்கப்படவிருந்த இரவுத் தபாலிரயில்களும் இவ்வாறு ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேலும், கொழும்பு கோட்டையிலிருந்து ரம்புக்கனை நோக்கி இரவு 11:00 மணிக்கு இயக்கப்படவிருந்த ரயிலும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

