• Login
Monday, June 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || 25 கிராம் ‘ஐஸ்’ஸூடன் பெண் கைது

GenevaTimes by GenevaTimes
June 8, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || 25 கிராம் ‘ஐஸ்’ஸூடன் பெண் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




கனகராஜா சரவணன்


 


கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்குப் புகையிரதம் மூலம் 25 கிராம் ‘ஐஸ்’ (Ice) போதைப்பொருளை வியாபாரத்திற்காகக் கடத்தி வந்த 29 வயதுடைய பெண் ஒருவர், மட்டக்களப்பு – கருவேப்பங்கேணி பகுதியில் வைத்து   திங்கட்கிழமை (08) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தெரிவித்தார்.


மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி ஜெயசிங்கவிற்குத் தனிப்பட்ட முறையில் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றினையடுத்து,  திங்கட்கிழமை (08) காலை 7.30 மணியளவில் குறித்த பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றை ஜெயசிங்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் முற்றுகையிட்டனர்.


இதன்போது, கொழும்பு – மட்டக்குளி பிரதேசத்தில் இருந்து வியாபாரத்திற்காக மட்டக்களப்பிற்குப் புகையிரதம் மூலம்   ‘ஐஸ்’ போதைப்பொருள் கடத்தி வரப்பட்டு, வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவை மீட்கப்பட்டதுடன், சந்தேக நபரான பெண்ணும் கைது செய்யப்பட்டார்.


கைது செய்யப்பட்ட 29 வயதுடைய பெண்ணுக்கு இரண்டு சிறு பிள்ளைகள் உள்ளமை தெரியவந்துள்ளது. அத்துடன், அவரது கணவர் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் பணிபுரிந்து வரும் நிலையில், இப்பெண் அண்மைக்காலமாக இந்தப் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


இக்கைதைத் தொடர்ந்து, குறித்த பெண் வேறு எந்தெந்தப் போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்புகளைப் பேணி வந்துள்ளார் மற்றும் யார் யாருக்கு இதனை விற்பனை செய்துள்ளார் போன்ற மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்வதற்காக, அவரைப் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்ற உத்தரவைப் பெறுவதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.


 



Read More

Previous Post

Best Budget Cars | டாடா டியாகோ vs மாருதி செலிரியோ.. குறைந்த பட்ஜெட்டில் சிறந்த கார்கள்..! | வணிகம் போட்டோகேலரி

Next Post

“மத்திய அரசின் நிர்வாக சீர்கேடுக்கு எதிராக ஓரணியில் திரள்வோம்” – எதிர்க்கட்சிகளுக்கு கார்கே கோரிக்கை | India News (இந்தியா செய்திகள்)

Next Post
“மத்திய அரசின் நிர்வாக சீர்கேடுக்கு எதிராக ஓரணியில் திரள்வோம்” – எதிர்க்கட்சிகளுக்கு கார்கே கோரிக்கை | India News (இந்தியா செய்திகள்)

"மத்திய அரசின் நிர்வாக சீர்கேடுக்கு எதிராக ஓரணியில் திரள்வோம்" - எதிர்க்கட்சிகளுக்கு கார்கே கோரிக்கை | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin