Last Updated:
டெல்லியில் இந்தியா கூட்டணியின் 25 கட்சிகள் கலந்து ஆலோசனை, மல்லிகார்ஜூன கார்கே மத்திய நிர்வாக சீர்கேடுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியாக ஒன்றாவோம் என அழைப்பு
டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில், 25 கட்சிகள் பங்கேற்ற நிலையில், மத்திய அரசின் நிர்வாக சீர்கேடுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, அபிஷேக் பானர்ஜி, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட 25 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அடுத்த மாதம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற உள்ள நிலையில், மாநிலங்களவை மற்றும் மக்களவையில் எழுப்ப வேண்டிய முக்கியப் பிரச்சினைகள், ஈரான் அமெரிக்கா போரால் இந்தியாவில் நிலவும் பொருளாதார சுணக்கம், மகளிர் இடஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
“மத்திய அரசின் நிர்வாக சீர்கேடுக்கு எதிராக ஓரணியில் திரள்வோம்” – எதிர்க்கட்சிகளுக்கு கார்கே கோரிக்கை


