
சின்னத்திரையில் அறிமுகமாகி, குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான நடிகை தர்ஷா குப்தா, தற்போது தனது பெயரிலேயே சொந்தமாக ஒரு புதிய செயலியைத் (App) தொடங்கி ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளார்.
இந்தச் செயலியில் பிறந்தநாள் வாழ்த்துத் தொடர்பான வீடியோ காலில் பேச ரூ. 6,000, பிராண்ட் விளம்பரங்களுக்கு ரூ. 50,000 மற்றும் சந்தாக் கட்டணமாக ரூ. 1,000 எனப் பிரத்யேக ரேட் கார்டை அவர் வெளியிட்டுள்ளார். பணத்திற்காக இப்படியா இறங்குவது என இணையவாசிகள் கடுமையாக விமர்சித்து வறுத்தெடுத்து வரும் நிலையிலும், அதைப் பற்றிக் கவலைப்படாமல் தர்ஷா குப்தா தனது புதிய தொழிலைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்.


